"உண்டியலில் விழுந்தது முருகனுக்கு சொந்தம்" - உண்டியலில் தவறி விழுந்த ரூ.1 இலட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்.. அதிகாரிகள் விளக்கம்.!

தவறி உண்டியலுக்குள் விழுந்த ஐபோன், கோவில் நிர்வாகத்திற்கே சொந்தமானது என பக்தரை அதிர்ச்சியில் ஆழ்த்திய கோவில் நிர்வாகம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Thiruporur Murugan Temple | iPhone Piggy Bank Case (Photo Credit: @Hiccup_Here / @Patrikaidotcom X)

டிசம்பர் 21, திருப்போரூர் (Thiruporur News): செங்கல்பட்டு (Chengalpattu) மாவட்டத்தில் உள்ள திருப்போரூரில், பிரபலமான கந்தசாமி கோவில் (Arulmigu Kandaswamy Temple, Thiruporur) உள்ளது. இங்கு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், திரளாக வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். இதனிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, கோவிலுக்கு அம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் தினேஷ் என்பவர் கோவிலுக்கு வருகை தந்துள்ளார்.

உண்டியல் திறக்கப்பட்டது:

இவர் சாமி தரிசனம் செய்துவிட்டு, பின் ஆப்பிள் ஐபோனையும் வைத்தபடி உண்டியலில் காணிக்கை போட்டுள்ளார். அச்சமயம், எதிர்பாராத விதமாக ஐபோன் உண்டியலுக்குள் தவறி விழுந்துள்ளது. இதனால் கோவில் நிர்வாகத்தரிடம் செல்போன் குறித்து கேட்டபோது, உண்டியல் திறப்பு சமயத்தில் சொல்வதாக கூறி அனுப்பி வைத்துள்ளனர். டிசம்பர் 19, 2024 அன்று கோவில் உண்டியல் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, தினேஷும் செல்போன் கிடைத்துவிடும் என்ற ஆவலில், 6 மாதங்கள் கழித்து கோவிலுக்கு ஓடோடி வந்திருக்கிறார். உண்டியல் திறக்கப்பட்டு செல்போனும் எடுக்கப்பட்ட நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் ஐபோன் கோவில் நிர்வாகத்திற்கே சொந்தம் என கூறியுள்ளனர். Chennai News: "என் வாழ்க்கை அழிந்ததுக்கு நீதாண்டா காரணம்" - எச்டிஎப்சி வங்கி ஊழியருக்கு கத்திக்குத்து.. காரணம் என்ன? 

மனு அளிக்க அதிகாரிகள் கோரிக்கை:

மேலும், ஸ்மார்ட்போனில் உள்ள தரவுகளை மட்டுமே நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். ஆதலால், இதுகுறித்து அறநிலையத்துறை அலுவலகத்தில் மனு அளிக்குமாறும் விளக்கம் அளித்துள்ளனர். இதனால் தற்போது ஸ்மார்ட்போன் கிடைக்காது என்பதை உணர்ந்துகொண்ட தினேஷ், ஏமாற்றத்துடன் புறப்பட்டுச் சென்றார். இந்த விஷயம் நெட்டிசன்களிடையே விமர்சனத்தை பெற்றுள்ளது.

நெட்டிசன்கள் விமர்சனம்:

பக்தர் விருப்பப்பட்டு ஐபோனை போட்டிருந்தாலும் பரவாயில்லை, தவறி விழுந்ததற்கு 6 மாதகாலம் காத்திருக்க வைத்து, அவரை வரவழைத்து அதிகாரிகள் இவ்வாறான செயலில் ஈடுபடுவது எப்படிப்பட்டது? எனவும் ஆதங்க குரல் எழுப்புகின்றனர். அதேவேளையில், உண்டியலில் இருக்கும் ரூ.1 க்கு கூட கணக்கு ஒப்படைக்க வேண்டும் என்பதால், ஸ்மார்ட்போன் உரிமையாளர் அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தே அவருக்கான பொருள் குறித்த தகவல் மீது, மேற்படி நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் என அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.