கள்ளக்காதலுக்கு மாமியார் இடையூறு.. தோழி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகள் வெறிச்செயல்.. விசாரணையில் பகீர் திருப்பம்.!
கணவர் தனது குடும்பத்திற்காக வெளியூருக்கு சென்று உழைக்க, வீட்டில் இருந்த மனைவி கள்ளக்காதல் உறவை ஏற்படுத்தி, தனக்கும்-குழந்தைகளுக்கும் ஆதாரமாய் இருந்த மாமியாரை தீர்த்துக்கட்டிய சம்பவம் நடந்துள்ளது.
டிசம்பர் 15, திருக்கழுக்குன்றம் (Chengalpattu News): செங்கல்பட்டு (Chengalpattu) மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் (Tirukalukundram), நெரும்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜசேகர் (வயது 42). இவரின் மனைவி அமுல் (வயது 38). தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். ராஜசேகரின் தாய் லட்சுமி (வயது 58). சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வைத்துள்ள ராஜசேகர், அவ்வப்போது வேலை விஷயமாக வெளியூர்களுக்கு சென்று பணியாற்றி வருவது வழக்கம்.
வீட்டுக்காக வெளியூரில் உழைத்த கணவன்:
இவ்வாறாக வெளியூர் செல்லும் நேரங்களில், சில நேரம் பணி சூழல் காரணமாக மாதக்கணக்கில் அவர் தங்கியிருந்து பணியாற்றி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்த அமுலுக்கு, அதே பகுதியில் வசித்து வரும் சரவணன் (வயது 42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இந்த விஷயம் மாமியார் லட்சுமிக்கு தெரியவந்துள்ளது. Woman Gang Rape: இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; கோவில் திருவிழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
கள்ளக்காதல் பழக்கம்:
இதனால் அவர் கள்ளக்காதல் ஜோடியை கண்டித்து, அப்பழக்கத்தை கைவிட வலியுறுத்தி இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக மாமியார் - மருமகள் இடையே தகராறு உண்டாகி இருக்கிறது. இதற்கிடையில், கடந்த செவ்வாய்கிழமை அன்று லட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருக்கழுக்குன்றம் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.
தற்கொலையில் சந்தேகம்:
இந்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பிரேத பரிசோதனை முடிவில் லட்சுமி கழுத்து நெரித்து கொல்லப்பட்டு, பின் தூக்கி தொங்கவிடப்பட்டுள்ளது உறுதியானது. லட்சுமியின் உடலில் சில கைரேகை, காயங்களும் இருந்தன. இதனால் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது அமுல் - சரவணன் இடையே இருந்த கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தது. Husband Kills Wife: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்; மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது..!
விலகிய மர்மம்:
விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள் அமுல், சரவணன் ஆகியோரை கைது செய்ய விரைந்த நிலையில், நேற்று காலை நெரும்பூர் கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் முன்னிலையில் அமுல், அவரின் தோழி பாரதி, கள்ளக்காதலன் சரவணன் ஆகியோர் சரணடைந்தனர். மேலும், கள்ளக்காதலை கண்டித்ததால் லட்சுமியை கொலை செய்ததாகவும் தெரிவித்தனர்.
தீர்த்துக்கட்டிய மருமகள்:
இதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், மூவரையும் கைது செய்த காவல் துறையினர் நீதிமன்ற நடவடிக்கைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.