Baby Kidnapped: சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு; அரசு திட்டத்தை வாங்கித்தருவதாக பகீர் சம்பவம்.!

பிறந்து 45 நாட்களேயான குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில், அரசு மருத்துவமனையில் குழந்தை மீட்கப்பட்டது. மர்ம பெண்ணுக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.

Baby (Photo Credit: Pixabay)

நவம்பர் 15, கண்ணகி நகர் (Chennai News): சென்னையில் உள்ள கண்ணகி (Kannagi Nagar Baby Kidnapped) நகரில் வசித்து வருபவர் ஆரோக்கியதாஸ். இவரின் மனைவி நிஷாந்தி. தம்பதிகளுக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின்னர் நிஷாந்தி தனது வீட்டில் இருந்த நிலையில், நேற்று அவரின் வீட்டிற்கு பெண் ஒருவர் வந்துள்ளார். தன்னை செவிலியர் என அறிமுகம் செய்த பெண்மணி, நிஷாந்தியிடம் உங்களின் குழந்தைகளுக்கு பல அரசு திட்டங்களை பெற வழிவகை செய்கிறேன் என அழைத்துள்ளார்.

குழந்தை கடத்தல்:

அவரின் பேச்சில் இருக்கும் விபரீதம் புரியாத நிஷாந்தியும், கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு பெண்ணுடன் ஆட்டோவில் புறப்பட்டு சென்றார். பெண் நிஷாந்தியை தி.நகர் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு குழந்தைக்கு பால், பிஸ்கட் வாங்கி வருமாறு ரூ.100 கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டார். பணத்தை வாங்கிய நிஷாந்தி கடைக்கு சென்று மீண்டும் வந்தபோது பெண் இல்லை. Chennai Shocker: அளவுக்கு அதிக எலி மருந்து; நெடி தாங்காமல் 2 குழந்தைகள் இருவர் பலி., பெற்றோர் கவலைக்கிடம்..! சென்னையில் சோகம்.!

காவல்துறையினர் விசாரணை:

இதனால் பதறிபோனவர் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, பல இடங்களில் குழந்தையை தேடி இருக்கிறார். குழந்தை எங்கும் காணாததால், கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல்துறையினர் குழந்தையை பல இடங்களில் தேடி வந்தனர். மருத்துவமனைகள், பிற காவல் நிலையங்களுக்கும் தகவல் உடனடியாக பரிமாறப்பட்டது.

திருவேற்காடு அரசு மருத்துவமனையில் மீட்பு:

இதனிடையே, நேற்று இரவு நேரத்தில் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என அனுமதி செய்துவிட்டு, பின் அவர் மாயமாகிவிட்டதாக திருவேற்காடு அரசு மருத்துவமனையில் இருந்து காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. தகவலை அறிந்த அதிகாரிகள், நிஷாந்தையை உடன் அழைத்துக்கொண்டு திருவேற்காடு மருத்துவமனைக்கு சென்றபோது, அவர் தனது குழந்தையை உறுதி செய்தார்.

பெண்ணுக்கு வலைவீச்சு:

இதனையடுத்து, குழந்தையை கடத்தி வந்த பெண்ணே, காவல் துறையினர் வசம் புகார் சென்றதை அறிந்து குழந்தையை விட்டுச் சென்றிருக்க வரவேண்டும் என சந்தேகித்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட பெண் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நிஷாந்தியிடமும் விசாரணை தொடருகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement