Man Dies by Electrocution: கர்ப்பிணி மனைவிக்கு இளநீர் பறிக்கச் சென்ற கணவர் மின்சாரம் தாக்கி பலி; மாமியார் வீட்டில் நடந்த சோகம்.!
மாமியார் வீட்டிற்கு வந்த மருமகன், மனைவியின் கோரிக்கையை ஏற்று இளநீர் பறிக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
டிசம்பர் 30, புவனகிரி (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, தெற்கு திட்டை கிராமத்தில் வசித்து வருபவர் குமார். இவரின் மகன் ஆனந்தராஜ், சென்னை வண்டலூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள விடுதியில் தங்கி இருக்கிறார். ஆனந்தராஜின் மனைவி நீதிகா. தம்பதிகளுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது.
இளநீர் கேட்ட மனைவி:
திருமணத்தைத் தொடர்ந்து நீதிகா தற்போது 3 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவர் சேத்தியாத்தோப்பு, ஓடாக்கநல்லூர் கிராமத்தில் இருக்கும் தாயின் வீட்டில் வசித்து வருகிறார். இதனிடையே, நீதிகாவை பார்க்க ஆனந்தராஜ், நேற்று முன்தினம் மாமியார் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். பின் மனைவி இளநீர் கேட்டதால், வீட்டின் பின்புறம் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி இருக்கிறார். 12-Year-Old Boy Dies: ஊஞ்சல் கட்டி விளையாட்டு; பீரோ கவிழ்ந்து 12 வயது சிறுவன் பரிதாப பலி.. இராமநாதபுரத்தில் சோகம்.!
மின்சாரம் தாக்கி துயரம்:
அச்சமயம், மரத்தில் இருந்து எதிர்பாராத விதமாக ஆனந்தராஜ் தவறி விழுந்தார். அப்போது, கொட்டகைக்கு அருகில் இருந்த மின்சார கம்பிகளின் மீது அவர் விழ, மின்சாரம் தாக்கப்பட்டதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், ஆனந்தராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மரணம் உறுதி:
அங்கு ஆனந்தராஜின் மரணம் உறுதி செய்யப்படவே, தகவல் அறிந்த ஒலக்கூர் காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.