Firecrackers Exploded: பட்டாசு கிட்டங்கி வெடித்துச் சிதறி விபத்து; 2 தொழிலாளர்கள் பரிதாப பலி., தூத்துக்குடியில் சோகம்.!

கிட்டங்கியில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடித்துசிதறிய காரணத்தால், 2 பேர் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் தூத்துக்குடியில் நடைபெற்றுள்ளது.

Firecrackers Exploded | File Pic (Photo Credit: @IndiaTVEnglish X)

செப்டம்பர் 01, சாத்தான்குளம் (Thoothukudi News): தூத்துக்குடி (Tuticorin) மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் (Sathankulam), நாசரேத், குறிப்புன்குளம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சிவசக்தி பட்டாசு ஆலை (Firecrackers Exploded) செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு அருகிலேயே பிரதானமான கிட்டங்கி ஒன்றும் இருக்கிறது. இதன் வாயிலாக அங்கு நேரடி விற்பனையும் செய்யப்பட்டு இருக்கிறது. Cremation Methods: இறந்தவரின் வீட்டில் நடக்கும் இறுதி காரியத்தில் இவ்வளவு விடயங்களா..? தலை சுற்ற வைக்கும் தகவல் இதோ..!

இருவர் பலி., 4 பேர் படுகாயம்:

இதனிடையே, நேற்று மதியம் கிட்டங்கியில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறியதைத்தொடர்ந்து, 2 அறைகள் இடிந்து விழுந்தன. அங்கு பணியில் இருந்த அரசர்குளம் கிராமத்தை சேர்ந்த முத்துக்கண்ணன் (21), காமுத்தியை சேர்ந்த விஜய் (25) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இடிபாடுகளில் புளியன்குடியை சேர்நத செல்வம் (25), செம்பூரை சேர்ந்த சுந்தர் (26), சேர்மக்கனி (31), முத்துமாரி (34) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த நாசரேத் காவல்துறையினர், பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராம்குமாரை கைது செய்தனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement