Dead Body (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 31, சென்னை (Chennai): இறுதி சடங்குகள் (Funeral) என்பது அனைத்து மதங்களிலும் நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும். இது மற்ற மதங்களை விடவும், இந்து மதத்தில் அதிகளவு வித்தியாசமான இறுதி சடங்குகள் நடத்தப்படுகின்றன. இந்த ஒவ்வொரு சடங்கிற்கும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர். உயிரிழந்தவர்கள் (Dead Body) மரணத்திற்கு பிறகு அமைதியான வாழ்க்கையை பெற வேண்டும் என்ற நோக்கில்தான் அனைத்து விதமான இறுதிச்சடங்குகளும் நடத்தப்படுகின்றது. அந்தவகையில், இதுகுறித்த முழு விவரங்களை பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நாடிகட்டு:

உயிரிழந்தவர்களின் உடலில் பாக்டீரியாக்கள் (Bacteria) அதிகம் இருக்கும். எனவே, அவர்களின் உடலில் இருந்து நுண்ணுயிர்கள் மூலம் வெளியேறும் சில வாயுக்கள் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை தடுக்கத்தான் நாடிகட்டு என்னும் பெயரில் காதையும், வாயையும் சேர்த்து கட்டுகிறார்கள். மேலும், மூக்கில் பஞ்சு வைத்து அடைக்கின்றனர்.

விளக்கு:

இறந்தவர்கள் வீட்டில் விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பது முக்கியமான சடங்காக கடைப்பிடிக்கப்படுகிறது. உயிர் சக்தியானது உடலை விட்டு பிரிந்து விட்டால் உடலானது வெற்றுடலாக மாறிவிடும். ஆன்மீக ரீதியாக அவர்கள் உயிர் அலைகள் அந்த இடத்திலேயே சுற்றிவரும். இவை மற்றவர்கள் உடலில் நுழைந்தால் அவர்கள் பல துன்பங்களை சந்திக்க நேரிடும். இதனை தடுக்கவே விளக்கேற்றி வைக்கப்படுகிறது. அதிலும், இந்த விளக்கு தெற்கு திசை நோக்கி ஏற்றிவைக்கப்பட வேண்டும். இதுதான் எமனுக்கான திசை ஆகும். Besant Nagar Matha Temple Festival: பெசன்ட் நகர் மாதா கோவில் திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

திரி:

ஒருவர் உயிரிழந்த பிறகு பஞ்ச பூதங்களால் நிறைந்த அவரின் உடலானது, அதன்பின் ஒரே ஆன்மா மட்டுமே ஒளிரும். விளக்குகளில் பயன்படுத்தப்படும் ஒற்றை திரி 'ஒளிரும் ஆன்மாவை' குறிக்கும்.

மூங்கில் பாடை:

மூங்கில் (Bamboo), குறிப்பிட்ட ஒலி ஆற்றல் வெளியிடும் தன்மை கொண்டது. இதில் இருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல், இறந்த உடலுக்கு கவசமாக அலைகளை ஏற்படுத்தக்கூடும். மூங்கிலால் செய்யப்பட்ட பாடையில் இருக்கும்போது அந்த இறந்த உடல், ஒலி ஆற்றலால் எதிர்மறை சக்திகளிடம் இருந்து பாதுகாக்கப்படும்.

கால்கள் சேர்த்து கட்டுதல்:

உடல் தகனம் (Cremation) செய்யப்படுவதற்கு முன்பு, அவர்கள் உடல் தரையில் வைக்கப்பட்டு, இறந்த உடலின் காலின் பெருவிரல் இரண்டும் சேர்த்து கட்டப்படும். இது உடலின் வலது மற்றும் இடதுபுற ஆற்றல்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து, உடலையே சுற்றி வர காலின் விரல்கள் கட்டப்படுகின்றது. Y Chromosome: ஆண் இனம் அழியப் போகிறதா..? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

மண்பானை:

உயிரிழந்த உடலை சுற்றி இருக்கும் ஆற்றலை ஒருமுகப்படுத்த பல பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில், மண்ணால் செய்யப்பட்ட மண்பானை (Clay Pot) பொருட்கள் அதன் வேலையை சிறப்பாக செய்கின்றது. இறந்த உடலை எதிர்மறை சக்திகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க மண்பானை பயன்படுகிறது.

உடல் அடக்கம்:

அனைத்து இறுதி சடங்குகளும் பகல் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும். ஏனெனில், இரவில் எதிர்மறை சக்திகள் அதிகம் உலவும். அவற்றின் சக்தியும் இரவு நேரங்களில் அதிகம் இருக்கும். இறந்த எதிர்மறை சக்திகள் எப்பொழுதும் மற்ற உடல்களில் நுழைய முயலும் என்பது நம்பிக்கை. அறிவியல் ரீதியாக கூறும்போது, இறந்தவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் நுண்ணுயிர்களின் அளவு அதிகமாக வெளிப்படும். இது சுற்றி இருப்பவர்களுக்கு எளிதில் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால்தான் உடல் அடக்கம் பகலில் செய்யப்படுகின்றது.