இன்று பள்ளி விடுமுறை | School Holiday in Tamilnadu due to Rains (Photo Credit: @Sunnewstamil X)

அக்டோபர் 16, நெல்லை (Tirunelveli News): வடகிழக்கு பருவமழை, தமிழகம்-புதுவை-காரைக்கால் பகுதிகள், கேரளா மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் தொடங்குகிறது. இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வரும் 19-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள - கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதனால் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. நாளைய வானிலை: அடுத்த ஒவ்வொரு நாளிலும் கொட்டப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.! 

மழை பள்ளிகளுக்கு விடுமுறை (School Leave Due to Rain):

இந்நிலையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நள்ளிரவு முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்த மழையால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. குறிப்பாக நகர் பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரால் பள்ளிக்கு மட்டும் 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவித்து இருக்கின்றனர்.

திருச்செந்தூர் சிவன் கோவிலில் கனமழை காரணமாக வெள்ளம் தேங்கியது: