TN Weather Update: தமிழ்நாட்டில் இன்று மிககனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.!
அதேவேளையில் இன்று தமிழ்நாட்டில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 19, சென்னை (Chennai): மேற்குத்திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தனது நாளைய வானிலை (Tomorrow Weather) அறிவிப்பில் தெரிவித்து இருந்தது. மேலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலை பகுதிகளிலும் இன்று அதிக கனமழைக்கான (Red Alert in Nilgiris) எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. தென்மேற்கு பருவமழை (Southwest Monsoon) தீவிரத்தின் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மிககனமழைக்கான எச்சரிக்கை:
இந்நிலையில், வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தற்போது வலுப்பெற்று இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையில் ஒடிசா நோக்கி நகரும். பின் அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் தமிழ்நாட்டில் அதிக கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி. திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிககனமழையும் எதிர்பார்க்கப்படுகிறது. TN Weather Update: 8 மாவட்டங்களில் காலை 10 மணிவரை வெளுத்து வாங்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
மதியம் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
இதனிடையே, இன்று மதியம் 01:00 மணிவரையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திருப்பூர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை:
தென்னிந்திய மற்றும் மத்திய இந்திய பகுதிகளில் தென்மேற்குப்பருவமழை தீவிரமடைந்து இருப்பதால், இன்று தமிழ்நாட்டில் மிககனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையிலும் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளதால், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.