Orange Alert for Tamilnadu: அப்படிப்போடு.. நாளை முதல் தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை; ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்.!

நாளை முதல் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் மிககனமழையும், மதுரை, பெரம்பலூர், குமரி, ஈரோடு உட்பட 16 மாவட்டங்களில் கனமழையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Rain Chennai (Photo Credit: @ANI X)

நவம்பர் 03, சென்னை (Chennai): வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழ்நாட்டில் (Tamilnadu Rains) நவமபர் 01ம் தேதி முதல் 06ம் தேதி வரை பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.

அதனை உறுதி செய்யும் பொருட்டு கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இது மக்களிடையே குளுகுளு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. Chengalpattu Shocker: மனைவியின் கழுத்தில் கத்தியால் சரமாரியாக குத்து; நடந்தையில் சந்தேகப்பட்டு குடிகார கணவன் வெறிச்செயல்.. பறிபோன உயிர்.! 

இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை முதலாக கனமழை முதல் மிககனமழை பெய்யலாம் என தெரிவித்துள்ள இந்திய வானிலை (Indian Meteorological Center) ஆய்வு மையம், ஆரஞ்சு எச்சரிக்கை (Tamilnadu Orange Alert) விடுத்துள்ளது.

அதன்படி, நாளை முதல் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் மிககனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.