IPL Auction 2025 Live

ATM Machine Robbery: நள்ளிரவில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் - காவல்துறையினர் தீவிர விசாரணை..!

ATM file pic (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 06, கிருஷ்ணகிரி (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருபரப்பள்ளி ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சார்பில் ஏ.டி.எம் எந்திரம் உள்ளது. இதன் அருகில் பல்வேறு நிறுவனங்கள், உணவகங்கள், மற்றும் சற்று தொலைவில் குருபரப்பள்ளி காவல்நிலையமும் இருக்கின்றன. இதன்காரணமாக, ஏ.டி.எம் இருக்கின்ற பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருக்கும். Man Raped And Killed The Minor Girl To Life Imprisonment: 5 வயது சிறுமி பலாத்காரம்; கழுத்தை நெரித்து கொலை செய்த ஆசாமிக்கு ஆயுள் தண்டனை..!

இந்நிலையில், 15 லட்சம் ரூபாய் பணத்தை வங்கி ஊழியர்கள் நேற்று இரவு ஏ.டி.எம் எந்திரத்தில் வைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து, நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் ஏ.டி.எம் அறைக்குள் சென்றுள்ளனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் கருப்பு சாயத்தை பூசிவிட்டு, அவர்கள் கொண்டு வந்த வெல்டிங் எந்திரம் மூலம் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து (Mysterious Persons Robbed 10 Lakhs) அதிலிருந்த 10 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து, உடனடியாக, குருபரப்பள்ளி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அங்குள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, கொள்ளைச் சம்பவம் பற்றி விசாரிக்கின்றனர். மேலும். கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.