ஏப்ரல் 06, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாகிம்-யில் கடந்த 2019-ஆம் ஆண்டு 5 வயது சிறுமி தனது பெற்றோருடன் நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்தார். பின்னர், அதிகாலை 5 மணியளவில் சிறுமியை காணவில்லை. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் சிறுமியை தேடி வந்துள்ளனர். இறுதியில், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன சிறுமியை தேடிவந்துள்ள நிலையில், சம்பவம் நடந்த அடுத்த நாள் கழிமுக பகுதியில் இறந்து கிடந்தார். Teacher Arrested For Misbehaving With Schoolgirl: பள்ளி மாணவியிடம் தகாத முறையில் ஈடுபட்ட ஆசிரியர் கைது..!

இதனையடுத்து, காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதனையில் சிறுமியை பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது (Minor Girl Raped And Killed) தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்ததில், அதே நடைபாதையில் வசித்து வந்த ஒருவர் தான் சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்து சிறுமியின் உடலை கழிமுகத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

பின்னர், சம்மந்தப்பட்ட அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. தற்போது, இறுதிக்கட்ட விசாரணையில், சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்து, கொலை செய்த ஆசாமிக்கு மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி இவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.