Indian Bank (Photo Credit : wikipedia)

ஜூன் 02, சென்னை (Technology News): வங்கி கணக்கு வைத்திருப்போர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பது தொடர்பான கட்டண விதிமுறை மாற்றம் செய்யப்பட்டு ரிசர்வ் வங்கியால் சமீபத்தில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ஒரு வங்கியின் வாடிக்கையாளர் மற்றொரு வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு சென்று தனது ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பணம் எடுத்தால், ஒரு மாதத்திற்குள் குறைந்தபட்சம் 5 தவணைக்கு மேல் பணம் எடுக்கும் பட்சத்தில் அவரிடம் 6 வது முறையாக பணம் எடுக்கும் போது ரூ.23 பணம் பிடித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

எத்தனை முறை இலவசமாக ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம்?

ஒரு வங்கியின் வாடிக்கையாளர் தனது வங்கி அட்டையை பயன்படுத்தி மற்றொரு ஏடிஎம்மில் 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம் என்ற விதி இருக்கிறது. ஆனால் 6 வது முறை எடுக்கும் போது ரூ.23 பிடித்தம் செய்யப்படும். இது பெரு நகரங்களில் 3 முறையும், கிராமப்புறங்களில் 5 முறையும் என கணக்கிடப்படுகிறது. இந்த கட்டண வசூல் முறையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் தனியார் வங்கிகள் இடையே வித்தியாசம் இருந்தன. வானிலை: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை நிலவரம் என்ன?.. விபரம் இதோ.! 

புதிய கட்டணம் குறித்த தகவல் :

இதனால் புதிய கட்டணம் கடந்த மே மாதம் முதல் அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக அமல்படுத்தப்பட்டது. அதன்படி இந்தியன் வங்கியின் சார்பில் தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 1 ஆம் தேதி முதல் பிற வங்கி ஏடிஎம்மில் மேற்கொள்ளப்படும் நிதி பரிவர்த்தனைக்கு ரூ.23 மற்றும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நிதி அல்லாத சேவைகளுக்கு ரூ.11 மற்றும் ஜிஎஸ்டி விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கட்டண உயர்வு :

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 5 முறை பிற ஏடிஎம்களில் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். அதனைத் தாண்டி பணம் எடுக்கும் போது அதற்கான கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி போல, தனியார் வங்கிகளும் தங்களது கட்டண உயர்வு தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றன.