Salem Robbery Attempt (Photo Credit: @Rafifaya X)

ஆகஸ்ட் 09, ஆத்தூர் (Salem News): சேலம் மாவட்டம் ஆத்தூரில் வசித்து வருபவர் வைத்தீஸ்வரன். இவர் ஆத்தூர் பகுதியில் ஏபிஎஸ் தங்க நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடை ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்கிறது. கடந்த வியாழக்கிழமை அன்று, இரவு சுமார் 08:40 மணியளவில் கடைக்கு நகை வாங்குவதாக 2 ஆண்கள் வந்தனர். அவர்களின் மீது வைத்தீஸ்வரனுக்கு சந்தேகம் இருந்த நிலையில், அவரது மனைவி செல்வலட்சுமி நகையை எடுத்து காண்பித்துக்கொண்டு இருந்தார். வானிலை: செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழை அறிவிப்பு.! 

ரசாயனம் தெளித்து திருட்டு முயற்சி:

அப்போது, நகை மாடல் பார்த்தவர்கள் கடைக்குள் நோட்டமிட்டனர். வைத்தீஸ்வரன் மனைவி செல்வலட்சுமி நகையை காட்டிக் கொண்டிருந்தபோது, ஒருவர் திடீரென ரசாயன பாட்டிலை எடுத்து கடையில் பணிபுரிந்த வசந்தி, செல்வலட்சுமி மீது வீசினர். ரசாயனத்தின் எரிச்சல் தாங்காமல் கடை ஊழியர் தப்பி ஓடிய நிலையில், செல்வலட்சுமி மற்றும் வைத்தீஸ்வரன் ஒருவரை பிடித்தனர். பின் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தப்பியோடிய ஒருவரையும் பிடித்தனர். கடையில் நடந்த நிகழ்வை பார்த்து திருடனை பிடிக்க முயற்சித்ததில், கடையின் அருகில் நின்றுகொண்டிருந்தனர் மீதும் ரசாயனம் அடிக்கப்பட்டது. கள்ளக்காதல் விவகாரம்; மனைவி கொடூரக் கொலை.. கணவர் உட்பட 3 பேர் கைது..!

திருடனை அடித்துநொறுக்கிய மக்கள்:

பொதுமக்களிடம் துப்பாக்கி இருப்பதாக காண்பித்து திருடன் மிரட்டியுள்ளான். ஆவேசமான பொதுமக்கள் கல் வீசி தாக்குதல் நடத்தி திருடனை பிடித்திருக்கின்றனர். இருவருக்கும் தர்ம அடி கொடுத்து, ஆடையை களைந்து வெளுத்தெடுத்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் அவசர ஊர்தியினர், நகைக்கடை உரிமையாளர் மற்றும் அவரின் மனைவி, ஊழியரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் பிடியில் இருந்த திருட்டு ஆசாமிகளையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். இவர்களிடம் துப்பாக்கி வந்தது எப்படி? எந்த ரசாயனத்தை தெளித்து கொள்ளை முயற்சி நடந்தது என விசாரணை நடந்து வருகிறது.

சேலம் நகைக்கடையில் கொள்ளை முயற்சி காட்சிகள்: