Man Dies from Washing Machine Electrocution (Photo Credit : @RahulKu72863612 X)

ஆகஸ்ட் 10, புதுடெல்லி (New Delhi News): ஒவ்வொரு வீட்டிலும் மிகப்பெரிய பணிச்சுமையாக இருப்பது துணி துவைப்பது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் குழந்தைகள் உள்ள வீட்டில் துணிகள் ஏராளமாக குவிந்து விடும். அதனை கை வலிக்க துவைத்த காலங்கள் மலையேறி, தற்போது வாஷிங் மெஷின் பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. மின்சார சக்தியுடன் இயங்கும் வாஷிங்மெஷினில் துணி துவைப்பது மிகவும் எளிதானது. நாம் வாங்கும் வாஷிங்மெஷினை பொறுத்து அதனை காய வைக்கும் வேலையையும் மிச்சப்படுத்தலாம்.

வாஷிங்மெஷினில் துணி போட்ட நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு :

என்னதான் தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மிகப்பெரிய வரமாக இருந்தாலும், அதில் ஏற்படும் கோளாறுகளை நாம் சரிவர கண்காணித்து சரி செய்யாத பட்சத்தில் அது நமக்கு எமனாகவும் மாறும் என்பதற்கு உதாரணமாக ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று மிகப் பெரிய அளவில் வைரலாகியது. அந்த வீடியோவில் வாஷிங்மெஷினில் துணி போட்டுக் கொண்டிருக்கும் நபர் ஒருவர் திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். வானிலை: கடலூர், ராமநாதபுரம் உட்பட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை.! 

நிபுணர்கள் எச்சரிக்கை :

இந்த வீடியோவில் வாஷிங்மெஷினை இயக்கிய படி அவர் தொடர்ந்து துணி போட்டுக் கொண்டிருந்த நிலையில், ஈரமான துணியில் கை வைத்து எடுக்க முயற்சித்தபோது அவரை மின்சாரம் தாக்கி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், நிபுணர்கள் மின்சார விஷயங்களில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கின்றனர். மேலும் மின்சார பொருட்களில் தண்ணீர் இருந்தால் கட்டாயம் அதை பயன்படுத்தியாக வேண்டும் என்ற நிலையில் மின்சாரத்தை துண்டித்து விட்டு, பிளக்கை எடுத்துவிட்டு அதனை சோதிக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறுகின்றனர்.

அடுத்தடுத்து உயிரிழப்புகள் :

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 28 வயதுடைய இர்பான் என்ற இளைஞர் வாஷிங்மெஷினில் இருந்து மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல மத்திய பிரதேசத்திலும் காவல்துறை அதிகாரி ஜகவர் சிங் யாதவ் என்பவர் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்ட நிலையில், மின்சாரம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

ஈரமான துணியை கைவைத்து எடுக்க முயன்று மின்சாரம் தாக்கிய வீடியோ :