Smartphone Blast Money (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 29, சென்னை (Technology News): பலரும் பிரதானமாக தற்போது பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன் நமது வாழ்க்கையில் மிக முக்கியமாகிவிட்டது. இந்த ஸ்மார்ட் போன் உலகை உள்ளங்கையில் கொண்டு வந்தாலும், நமது அறியாமையால் செய்யும் சில விஷயங்கள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் பெரும்பாலான மக்கள் போன் கவரில் பணம் அல்லது ஏடிஎம் கார்டு வைத்து பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் செல்போன் திடீரென வைத்து சிதறுவது அல்லது தீ விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி உள்ளது. South Korea Bans Phones: 'மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை'.. தென் கொரியாவில் புதிய சட்டம்..!

சூடாகும் செல்போன் :

போன் சூடாகும்போது இந்த பிரச்சனை ஏற்படும். அதே நேரத்தில் நீண்ட நேரம் தொலைபேசியை பயன்படுத்துவது, தங்களது சார்ஜரை விடுத்து விட்டு வேறொரு சார்ஜரில் சார்ஜ் போடுவது போன்றவையும் கூடுதல் காரணமாக சொல்லப்படுகிறது. மொபைலில் இருக்கும் காந்தப்புலம் நமது மொபைலில் பின்புறம் வைக்கப்படும் ஏடிஎம் கார்டு அட்டை மற்றும் ரூபாய் நோட்டுகளுடன் வினை புரியும் தன்மை கொண்டது. செல்போன் சூடாகும்போது அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் ரூபாய் நோட்டுகள் பாதிப்பை ஏற்படுத்தும்.

செல்போன் வெடிக்கும் அபாயம் :

இதனால் பேட்டரியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு திடீரென அவை வெடித்து சிதறும் அபாயமும் உண்டாகிறது. ரூபாய் நோட்டுகளில் பல வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது திடீர் தீ விபத்துக்கு வழிவகை செய்யும். இதனை தவிர்க்கும் பொருட்டு தனியாக கார்டு ஹோல்டர் அல்லது பர்ஸில் ஏடிஎம் கார்டு, பணம் போன்றவற்றை வைத்து பயன்படுத்தலாம். செல்போன் பயன்பாட்டில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.