வானிலை: 3 மணிநேரத்திற்கு 29 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு.!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 29 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

Tamilnadu Rains (Photo Credit : @PTI_News X)

நவம்பர் 23, நுங்கம்பாக்கம் (Chennai News): தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருந்தது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும். 14 வயது மகளின் தோழர்களுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய தாய்.. ஸ்னாப்சாட் மூலம் பகீர் செயல்.!

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, தென்காசி, தேனி, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Update):

சென்னை வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement