Thaipoosam Special: தைப்பூசம் 2025 - பழனி போக திட்டமா? சிறப்பு இரயில் சேவை அறிவிப்பு.!
16 இரயில் பெட்டிகளுடன் மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு இரயில் சேவை இயக்கப்படும் என தென்னக இரயில்வே சார்பில், மதுரை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான விபரத்தை தொடர்ந்து எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் படிக்கவும்.
ஜனவரி 22, மதுரை (Madurai News): தமிழ்கடவுளான முருகப்பெருமான் கைலாயத்தில் சிவன் - பார்வதியான (Lord Shiva & Parvati) பெற்றோருடன் இருந்தபோது, ஞானப்பழத்திற்கு நடந்த பிரச்சனையில், விநாயகர் தனது சாதுர்யத்தால் வெற்றியடைய, ஆத்திரமடைந்த முருகன் (Lord Murugan) பழனிக்கு வந்து அமர்ந்த நாள் தைப்பூசம் (Thaipusam) பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 2025ம் ஆண்டுக்கான தைப்பூசம் தை மாதத்தில் வரும் பௌர்ணமி பூசம் நட்சத்திரம் இணைந்த நாளில் வருகிறது. 11 பிப்ரவரி 2025 செவ்வாய்க்கிழமை 2025ம் ஆண்டுக்கான தைப்பூசம் (Thaipusam 2025) கொண்டாடப்படும் நிலையில், 10 பிப்ரவரி 2025 அன்று மாலை 06:01 மணிக்கு மேல் தொடங்கி 11 பிப்ரவரி 2025 அன்று மாலை 06:34 க்கு நிறைவு பெறுகிறது.TN Govt Announcemnt: மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு.!
2025 தைப்பூசமும் அரசின் அறிவிப்புகளும்:
முருக பக்தர்களால் காவடி விரதம் இருந்து கொண்டாடப்படும் தைப்பூச பண்டிகை (Thaipoosam Festival), திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் (Palani Murugan Temple) களைகட்டும். அன்றைய நாள் மட்டுமல்லாது, 48 நாட்களுக்கு முன்னதாகவே முருக பக்தர்கள் விரதத்தை தொடங்கி கடைபிடித்து வருவார்கள். தைப்பூசம் அன்று நடைபயணமாக காவடிகளை சுமந்து பழனியில் தரிசனம் மேற்கொள்வார்கள். தைப்பூசம் அன்று வரும் பக்தர்களுக்கு வழிநெடுக அன்னதானம், குளிர்பானம் போன்றவை வழங்கப்படும். இதனிடையே, பாதை யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு சுகாதாரமான உணவுகளை அன்னதானமாக வழங்குவதை உறுதி செய்ய, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, உரிய அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து சிறப்பு இரயில் (Thaipoosam Special Train):
மதுரை ரயில் நிலையத்திலிருந்து பழனி (Madurai to Palani Special Train) ரயில் நிலையத்திற்கு, தைப்பூசத்தை முன்னிட்டு பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வண்டி எண் 06722 மதுரை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து, பழனிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக பதினோராம் தேதி 08:45 மணி அளவில் புறப்பட்டு, நன்பால் 11:30 மணி அளவில் பழனி சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் பழனியில் இருந்து மதுரைக்கு 06721 முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் மாலை 3 மணி அளவில் புறப்பட்டு, மதுரை நோக்கி பயணிக்கிறது. இந்த ரயில் சோழவந்தான், கொடைரோடு, அம்பாத்துறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 16 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தைப்பூசம் சிறப்பு இரயில் தொடர்பான அறிவிப்பு:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)