EVKS Elengovan: ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை பின்னடைவு: வருத்தத்தில் தொண்டர்கள்.!

கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை திடீரென மோசமடைய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

EVKS Elangovan (Photo Credit: Berlina_1850 X)

டிசம்பர் 14, சென்னை (Chennai News): ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (EVKS Elangovan). இவர் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த நிலையில், மகனின் மறைவுக்கு பின்னர் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து கட்சி, மக்கள் பணிகளை கவனித்து வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதி (EVKS Elangovan Health Status):

இதனிடையே, கடந்த நவம்பர் 20ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்த நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின், காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உட்பட பலரும், நேரில் சென்று மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். Gold Silver Price: தங்கம் விலை இன்று கிடுகிடு குறைவு.. சவரன் ரூ.57,120 க்கு விற்பனை..! 

உடல்நிலை மோசம் என தகவல்:

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், சென்னையில் செயல்பட்டு மியாட் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர்கள் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளித்து வந்தனர். அவரின் உடல் மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சையை ஏற்க மறுப்பதால், அவரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் இளங்கோவன் உடல்நிலை பின்னடைவை சந்திப்பது, அவரின் ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் நண்பர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.