IPL Auction 2025 Live

Nigeria Hackers: சொசைட்டி பேங்கில் கைவரிசை காட்டிய ஹேக்கர்கள்.. டெல்லிக்கு சென்று குற்றவாளிகளை தட்டிதூக்கிய தமிழ்நாடு போலீஸ்.!

இன்டர்நெட்டை பொறுத்தமட்டில் தனிநபரோ வாங்கியோ சுதாரிப்பாக இல்லாவிடில் ஹேக்கர்கள் நமது பணத்தை மொத்தமாக வழித்து சென்றுவிடுவார்கள் என்ற சம்பவத்திற்கு சாட்சியாக கூட்டுறவு வங்கியின் கணக்கிலேயே கைவைத்த சம்பவம் நடந்துள்ளது.

Ekene Gowin - Augustine Chakwedo (Photo Credit: The Hindu)

ஜனவரி 13, மண்ணடி: சென்னையில் உள்ள மண்ணடி, தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் (Tamilnadu Society Bank Headquarters, Chennai) தலைமை அலுவலகத்தில் வங்கியின் இருப்பு சோதிக்கப்பட்டுள்ளது. அப்போது, வங்கியின் கணக்கில் இருந்து ரூ.2.60 கோடி பணத்தை ஹேக்கர்கள் மற்றொரு வங்கிக்கணக்குக்கு மாற்றியது அம்பலமானது.

இதனையடுத்து, உடனடியாக சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு, சைபர் கிரைம் காவல் துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு 1 மணிநேரத்தில் ரூ.1 கோடியே 10 இலட்சம் பணம் மீட்கப்பட்டது. மீதமுள்ள தொகை நைநீரிய வங்கிக்கணக்குக்கு மற்றம் செய்யப்பட்டு பிட்காயினாக வாங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கண்டறிந்த சைபர் கிரைம் காவல் துறையினர், கணினியின் ஐ.பி முகவரியை அடையாளம் கண்டு டெல்லியில் இருந்து செயல்பட்டு வந்த நைஜீரிய மோசடி (2 Nigerians Arrested by Chennai Cops Stealing Amount form Bank ) கும்பலான ஏக்னே காட்வின், அகஸ்ட்வின் என்பது தெரியவந்தது. இருவரிடமும் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. Salem Wardens Arrested: சிறை அதிகாரிக்கே சிறையில் தண்டனை.. 20 வயது இளம்பெண் மிரட்டி பலாத்காரம்.. அதிரவைக்கும் சம்பவம்.! 

அப்போது, இணையத்துடன் இணைந்த உள்ளக வங்கியியல் (Core Banking) செயல்முறையை பயன்படுத்துகிறது என்பதால், அவர்களுக்கு போலியான மெய்யில் அனுப்பி லிங்கை கிளிக் செய்ய வைத்து வங்கிக்கு தெரியாமல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளையடித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதமே திட்டம் தீட்டப்பட்ட நிலையில், டெல்லி மற்றும் மும்பை மாநகரங்களில் உள்ள வங்கிகளில் போலியான 30 க்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டு படிப்படியாக திருட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது என்பது அம்பலமானது. டெல்லியில் உள்ள உத்தம் பகுதியில் தங்கியுள்ள நைஜீரியர்கள் பல்வேறு இணையவழி குற்றங்களில் ஈடுபடுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 13, 2023 08:45 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).