வானிலை: மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை; நாளைய வானிலை நிலவரம் என்ன?.. விபரம் உள்ளே.!
மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நவம்பர் 21, சென்னை (Chennai News): குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
இன்றைய வானிலை (Today Weather):
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. TVK Alliance: தவெகவுடன் கூட்டணியா?.. விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் செல்வப்பெருந்தகை பதில்.!
நாளைய வானிலை (Tomorrow Weather):
நாளை நவம்பர் 22ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 25 -ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழையும், 26, 27ஆம் தேதி கன முதல், மிக கன மழைகான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
புயல் முன்னெச்சரிக்கையாக, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் நாளை, வெள்ளிக்கிழமை (நவ.22) தேதி முதல் கடலுக்கு செல்ல மீனவர் நலத்துறை தடை விதித்துள்ளது. மேலும், மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள், இன்று வியாழக்கிழமை (நவ.21) திரும்பி வர அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். இன்று இரவு முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் மீனவர் நலத்துறை தெரிவித்துள்ளது. மேலும், அறிவிப்பினை மீறி கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீது, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நேரலையில் புயல் நகர்வுகளை அறிந்துகொள்ள விண்டி (Cyclone Live Tracker Windy):