TN Bus Strike: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்... நடு வழியில் பேருந்தை நிறுத்தி தப்பியோடிய ஓட்டுநர்..!

சக ஊழியர்களுக்கு பயந்து அரசுப்பேருந்தை நடு வழியில் நிறுத்தி ஓட்டுநர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Bus Strike (Photo Credit: @backiya28 X)

ஜனவரி 09, கள்ளக்குறிச்சி (Kallakurichi): தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக ஊழியா்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய போராட்டத்தை துவங்கியுள்ளனர். இருந்த போதிலும், தொமுச, ஐஎண்டியுசி தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துக்கள் இயக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சீராக இயங்கவில்லை என கூறப்படுகிறது. Viral Video: கல்லூரியில் மது அருந்திவிட்டு அட்டூழியம் செய்யும் ஆசிரியர்... வைரலாகும் வீடியோ..!

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தை இயக்கிச்சென்ற பேருந்து ஓட்டுனர் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து பணிமனை அருகே சென்றபோது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு கூடியிருந்ததால் பயந்து போன அரசு பேருந்து ஓட்டுனர் அரசு பேருந்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு இறங்கி ஓடியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement