வானிலை: அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 11, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் மண்டலம் 01 பகுதியில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 40.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை. வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36-41 டிகிரி செல்சியஸ், தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-38 டிகிரி செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-38 டிகிரி செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள் 33-35 டிகிரி செல்சியஸ், மலைப் பகுதிகளில் 22-27 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. வானிலை: 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் அப்டேட்..!
இன்றைய வானிலை & நாளைய வானிலை (Today Weather & Tomorrow Weather):
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில், நேற்று (10-04-2025), மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (11-04-2025) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் வழுவிழந்தது. இருப்பினும், அதே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று (11-04-2025) மற்றும் 12-04-2025, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13-04-2025 முதல் 17-04-2025 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:
இன்று (11-04-2025) மற்றும் நாளை (12-04-2025), தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
11-04-2025 மற்றும் 12-04-2025, அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம்.
சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Update):
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (11-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (12-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
இன்று (11-04-2025) மற்றும் நாளை (12-04-2025), தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
இன்று (11-04-2025), மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)