வானிலை: இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tomorrow Weather (Photo Credit: LatestLY)

ஏப்ரல் 21, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணிநேரத்தில்‌ தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி பகுதியில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 40.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1-2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37-40 டிகிரி செல்சியஸ், தென்தமிழக கடலோரப்பகுதிகள் 34-36 டிகிரி செல்சியஸ், வட தமிழக கடலோர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-38 டிகிரி செல்சியஸ், மலைப் பகுதிகளில் 21-26 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. Gold Silver Price: ரூ.72 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை; தொடர் உச்சத்தால் நகைப்பிரியர்களுக்கு ஷாக்.!

இன்றைய வானிலை & நாளைய வானிலை (Today Weather & Tomorrow Weather):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இன்று (21-04-2025) மற்றும் நாளை (22-04-2025), தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23-04-2025 முதல் 27-04-2025 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:

21-04-2025 முதல் 25-04-2025 வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

21-04-2025 முதல் 25-04-2025 வரை, அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம்.

சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Update):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (21-04-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌. நாளை (22-04-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement