Mysterious Person Snatched Jewelry: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை திருட்டு; மர்ம நபர் தப்பி ஓட்டம்..!

கோயம்புத்தூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் தண்ணீர் கேட்பதுபோல் நடித்து, மர்ம நபர் நகையை பறித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Theft (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 19, கோயம்புத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டம், செல்வபுரம்-பேரூர் சாலையில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி அருகே வசித்து வரும் 70 வயது மூதாட்டி மல்லிகா என்பவர், சம்பவ நாளன்று மதியம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வீட்டிற்குள் 40 வயது மதிக்கத்தக்க நபர் கையில் துண்டு சீட்டுகளுடம் உள்ளே வந்துள்ளார். Schoolgirl Death: 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி பலி – விளையாட்டால் நேர்ந்த சோகம்..!

இதனை பார்த்த மல்லிகா நீங்கள் யாரென்று கேட்டுள்ளார். அதற்கு அவர், தான் ஓட்டு கேட்டு வெயிலில் வந்ததால், தண்ணீர் தாகம் எடுக்கிறது, குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் தண்ணீர் எடுத்து வர மல்லிகா சமையல் அறைக்கு சென்றுள்ளார். மூதாட்டியை பின்தொடர்ந்து சென்ற அந்த நபர், திடீரென அவரின் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை (Jewelry Theft) பறித்துக்கொண்டு, உடனடியாக அவர் கொண்டு வந்திருந்த இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டார்.

பின்னர் இதுதொடர்பாக, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement