Vijayakant X Name Changed: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம்... பிரேமலதாவின் செயல்..!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் எக்ஸ் கணக்கின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Vijayakant X Name (Photo Credit: @imPremallatha X)

ஜனவரி 12, சென்னை (Chennai): தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் இறப்பு தமிழ்நாட்டையே உலுக்கியது. பல நடிகர்களும் அரசியல்வாதிகளும் பொதுமக்களும் விஜயகாந்த் உடலை நேரில் பார்த்து அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். இன்னும் பலரும் அவருடைய வீட்டில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 7 New Districts Coming Up In Tamilnadu: தமிழ்நாட்டில் புதிதாக உருவாகும் 7 மாவட்டங்கள்... எது தெரியுமா?.!

விஜயகாந்த் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம்: இந்த நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சமூக வலைதளமான எக்ஸ் தள கணக்கை தனது பெயருக்கு அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாற்றியுள்ளார். விஜயகாந்த் மறைந்து சில நாட்களிலேயே, அவரின் சமூக வலைதள கணக்கு நீக்கப்பட்டு வேறு பெயருக்கு மாற்றப்பட்டிருப்பது நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்கள் இடையே பேசுபொருளாகியுள்ளது

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement