ICICI Bank (Photo Credit: Facebook)

ஆகஸ்ட் 09, புதுடெல்லி (New Delhi News): இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ, தனது வாடிக்கையாளர்களுக்கான வங்கிக்கணக்கின் குறைந்தபட்ச இருப்புத்தொகையை உயர்த்தி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிராமப்புறங்கள், புறநகர், நகர்ப்புறங்களில் வங்கிக்கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இருப்புத்தொகை அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வங்கிக்கணக்கு தொடங்கியவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும். அதற்குமுன் வங்கிக்கணக்கு தொடங்கியவர்களுக்கு பழைய நடைமுறையே அமலில் இருக்கும். அதன் விபரங்கள் பின்வருமாறு., மாணவர்களுக்கு குஷி செய்தி.. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. புதிய மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு.! 

ஐசிஐசிஐ பேங்க் மினிமம் பேலன்ஸ் (ICICI Bank Minimum Balance):

மெட்ரோ & பெருநகரங்கள்: ரூ.50,000/-

புறநகர் பகுதிகள்: ரூ.25,000/-

கிராமப்பகுதிகள்: ரூ.10,000/-

பணம் செலுத்த கட்டுப்பாடு:

* மாதம் 3 முறை வங்கியின் ஏடிஎம்-ல் இலவசமாக பணத்தை நிரப்பிக்கொள்ளலாம்

* 3 முறை தாண்டினால் ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் ரூ.150 கட்டணம் விதிக்கப்படும்

பாதிப்பு யாருக்கு?

தனியார் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள், சேமிப்பு கணக்கு உட்பட பூஜ்யம் இருப்புத்தொகை இல்லாதவர்களுக்கு இந்த விஷயம் மிகப்பெரிய பாதிப்பை தரும் என வாடிக்கையாளர்கள் விரக்தி தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் இருப்புத்தொகையை பராமரிக்க வேண்டும். எஸ்எம்எஸ், ஏடிஎம் சேவை கட்டணம் என வரி வசூலும் தொடருகிறது. விரைவில் மினிமம் பேலன்ஸ் தொகை பிற தனியார் வங்கிகளிலும் அதிரடியாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கியின் அறிவிப்பு (ICICI Bank Minimum Balance Latest Announcement):