ஜனவரி 12, சென்னை (Chennai): தற்போது தமிழ்நாடு 38 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் கடந்த அதிமுக ஆட்சியின் போது தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் அந்த சமயம் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் மாவட்டங்களையும் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். Sensex Hits All Time High: வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட சென்செக்ஸ்.. உச்சம் சென்ற பங்குச்சந்தை..!
புதிதாக உருவாகும் 7 மாவட்டங்கள்: அதுகுறித்த பரிசீலனைகள் நடைபெற்ற நிலையில் தற்போது மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப புதிதாக ஏழு மாவட்டங்கள் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, பழனி, ஆரணி, விருத்தாசலம் மற்றும் கோபிச்செட்டிபாளையம் ஆகியவை தனி மாவட்டங்களாக உதயமாகவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் தனி மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.