ஜூன் 01, சென்னை (Technology News): பொதுத்துறை வங்கிகளில் முக்கியமானதான கனரா வங்கி தனது சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாத பட்சத்தில் அதற்கு விதிக்கப்படும் அபராதம் தொடர்பான நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜூன் 01, 2025 இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் கனரா வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. வருங்கால வைப்பு நிதி: PF என்றால் என்ன? அதன் பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
இனி அபராதம் கிடையாது :
முன்னதாக கனரா வங்கியின் நகர கிளையில் கணக்கு வைத்திருப்பதற்கு குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.2000, சிறுநகர கிளையில் ரூ.1000, கிராம கிளையில் ரூ.5000 பராமரிப்புத்தொகை இருப்பு வைக்க வேண்டும் என்ற விதிமுறை அமலில் இருந்தது. இந்த விதிமுறையை பின்பற்றாத ஒருவரிடமிருந்து ரூ.25 முதல் ரூ.45 வரை அபராதமும் வசூல் செய்யப்பட்டிருந்தது. இந்த நடைமுறைக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது கனரா வங்கி இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
கனரா வங்கியின் அதிகாரபூர்வ அறிவிப்பு :
Feel the freedom, bank the difference.
Starting 1st June 2025, Canara Bank offers no penalty on non-maintenance of minimum balance.
Applicable to all Savings Bank Account holders!#CanaraBank #YourAccountYourFreedom #PenaltyWaiver pic.twitter.com/fAALUO80MZ
— Canara Bank (@canarabank) June 1, 2025