Omni Bus Accident: தடுப்புச்சுவரில் ஆம்னி பேருந்து மோதி விபத்து; 20 பேர் படுகாயம்..!

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் மோதிய விபத்தில், 20 பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.

Kallakurichi Accident (Photo Credit: @LatestLY X)

ஏப்ரல் 27, உளுந்தூர்பேட்டை (Kallakurichi News): நேற்று இரவு நாகர்கோவிலில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஆம்னி பேருந்து, சென்னை நோக்கி சென்றது. இந்நிலையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (Chennai-Trichy National Highway) இன்று அதிகாலை பேருந்து சென்று கொண்டிருந்தபோது, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் சாலையில் எதிர்பாராதவிதமாக, சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. Medicinal Benefits Of Ginger: உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் இஞ்சியின் மருத்துவ பயன்கள்..!

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், படுகாயம் அடைந்த 20 பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், உளுந்தூர்பேட்டை ஆசனூர் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதனை பேருந்து ஓட்டுநர் கவனிக்காமல் வேகமாக வந்ததால், இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement