ஏப்ரல் 27, சென்னை (Health Tips): இஞ்சியை பெரும்பாலும் நாம் தேநீர் மற்றும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால், இஞ்சியில் (Benefits Of Ginger) பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ பலன்கள் உள்ளன. அவற்றை பற்றி இதில் தெரிந்துகொள்வோம். 2 Youths Stole The Money: வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறல்; போதை ஆசாமிகள் கைது..!
இஞ்சி சாறை (Inji Saru Benefits) பாலில் கலந்து பருகினால் உடல் எடையை குறைத்து வயிற்று நோய்களை குணப்படுத்துகிறது. இஞ்சியை சுட்டு சாப்பிட்டால் பித்த, கப நோய்கள் குணமாகும். வாதக்கோளாறு நீங்க இஞ்சி சாறில் வெல்லம் கலந்து சாப்பிடவும். இதனை புதினாவோடு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் பித்தம், அஜீரண கோளாறு மற்றும் வாய் துர்நாற்றம் சரியாகும். உடலில் சுறுசுறுப்பு உண்டாகும். தொடர்ந்து 3 நாட்கள் காலையில் இஞ்சி சாறில் உப்பு கலந்து குடித்து வந்தால் பித்த தலைசுற்றல், மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகள் தீரும்.
இஞ்சி சாறோடு தேன் கலந்து சூடாக்கி அதனை காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு, சுடுதண்ணீர் குடித்து வந்தால் தொந்தி குறையத்தொடங்கும். மேலும், இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு இவை இரண்டையும் சேர்த்து குடித்து வர பசியை உண்டாக்கும். இஞ்சியை அரைத்து அதனை நீரில் கலந்து தெளிந்த நீரை எடுத்து அதில் துளசி இலை சாறை கலந்து, ஒரு கரண்டி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இளமை தோற்றம் பெறுவதோடு, உற்சாகத்தையும் அளிக்கிறது. வெங்காய சாறு, இஞ்சி சாறு இவை இரண்டையும் கலந்து தொடர்ந்து ஒரு வாரம் காலையில் பருகி வந்தால், நீரிழிவு நோய் குணமாகும்.