Vegetable Price Rise: மீண்டும் உயர்ந்த காய்கறி விலை... காரணம் என்ன?.!
தக்காளி, வெங்காயம், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விற்பனை விலை அதிகரித்துள்ளது.
டிசம்பர் 21, சென்னை (Chennai): நாடு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக காய்கறிகளின் விலையானது உயர்ந்துள்ளது (Vegetable Price Rise). தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ 35 ரூபாய்க்கும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும் தக்காளியானது ஒரு கிலோ ரூ. 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட் கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Man Kills Wife For Late Tea: டீ ரெடி பண்ண 10 நிமிடமா?: ஆத்திரத்தில் மதியிழந்த கணவனால் துண்டிக்கப்பட்ட மனைவியின் தலை.. நெஞ்சை பதறவைக்கு கொடூரம்.!
மேலும் வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி முட்டைகோஸ் ஒரு கிலோ பத்து ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், பீன்ஸ் மற்றும் கத்தரிக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.