Teenager Dies By Suicide: காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.. குடும்பத்தினர் சோகம்..!
நீலகிரியில் காதலி பேசுவதை நிறுத்திவிட்டதால், வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 27, ஊட்டி (Nilgiris News): நீலகிரி மாவட்டம், ஊட்டி தலைக்குந்தா பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரது மகன் கார்த்திக் (வயது 24). இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக காதல் ஜோடி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்த இளம்பெண் கார்த்திக்கை திருமணம் செய்ய மறுத்ததோடு, அவருடன் பேசுவதையும் (Love Failure) நிறுத்திவிட்டார். Tuition Teacher Raped Student: 10ம் வகுப்பு மாணவனை பலாத்காரம் செய்த ஆசிரியை; சிவகாசியில் அதிரவைக்கும் சம்பவம்.!
இதன்காரணமாக, கார்த்திக் விரக்தியில் மது பழக்கத்திற்கு அடிமையானார். இதனால், சரிவர வேலைக்கு செல்ல முடியாமல், மனமுடைந்து பலமுறை தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 24-ஆம் தேதி அன்றிரவு உணவை சாப்பிட்டுவிட்டு, தனது அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில், புதுமந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சேர்த்தனர்.
மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.