Teenager Murder: குடிபோதையில் தகராறு; இரும்புக் கம்பியால் தொழிலாளி அடித்து கொலை.. வாலிபர் கைது..!
திருச்சியில் மது போதையில் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 10, திருச்சி (Trichy News): திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த காலச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அஜீத்குமார் (வயது 27). இவர், தனது நண்பர் சதீஷ் (வயது 29) உட்பட மற்ற தொழிலாளர்களுடன் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி சாலையோரங்களில், பேவர் பிளாக்' கற்கள் பதிக்கும் வேலை பார்த்து வந்தார். 70-Year-Old Lady Killed: மதுபானம் வாங்க பணம் தராத மூதாட்டி அடித்துக்கொலை; இரத்த வெள்ளத்தில் மூழ்கி பறிபோன உயிர்.!
இந்நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 08) இரவு வேலையை முடித்து விட்டு அஜீத்குமாரும், சதீசும் தங்களின் நண்பர்களுடன் மது அருந்தினர். அப்போது, இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சதீஷ், அங்கிருந்த இரும்பு கம்பியால் அஜீத்குமாரை பலமாக (Murder) தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அஜீத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த லால்குடி காவல்துறையினர், அஜீத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளி சதீஷ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.