Child Marriage Case: சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை; வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு..!

தூத்துக்குடியில் சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ள வாலிபர் மீது, இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Sexual Abuse | Court Judgement, Both File Pic (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 23, தூத்துக்குடி (Tuticorin News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் 2-வது தெருவை சேர்ந்த ரவி என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 24). இவர் அந்த பகுதியில் மினி பேருந்தின் (Mini Bus) ஓட்டுநராகவும், கூலி வேலை செய்தும் வந்துள்ளார். இவருக்கு 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ள சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. Car Maintenance Tips: கொளுத்தும் வெயிலில் கார்களை பராமரிப்பது எப்படி..? விவரம் இதோ..!

கடந்த 2021-ஆம் ஆண்டு, சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று மஞ்சள் கயிறை கழுத்தில் கட்டி, சிறுமியுடன் பாலியல் சீண்டலில் (Sexual Harassment) ஈடுபட்டுள்ளார். பின்னர், இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் மணிகண்டன் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டம், மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதன் இறுதிகட்ட விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மாதவராமானுஜம், குற்றவாளியான மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement