Heatwave Cars file pic (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 23, சென்னை (Technology News): கோடைகாலத்தில் கொளுத்தும் வெயிலில், வாகன உரிமையாளர்கள் தங்களது கார்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

கோடைகால வெயிலின் தாக்கத்தினால் நம்முடைய வாகனங்களில் உள்ள பெயிண்ட் மங்கலாவதற்கும், அது உரிவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. எனவே, அடிக்கடி காரை கழுவி, வண்ணங்கள் போகாமல் இருக்க வேக்ஸ் பயன்படுத்த வேண்டும். மேலும், நிழலில் வாகனத்தை நிறுத்தி அதன் மேல் கார் கவர் கொண்டு மூடி வைக்கவும். Benefits Of Tomato: இதய நோய்களுக்கு தீர்வாகும் தக்காளி; நன்மைகள் என்னென்ன..? விவரம் இதோ..!

கோடைகாலத்தில் அடிக்கடி என்ஜின் பகுதி சரியாக உள்ளதா என்று பரிசோதித்து கொள்வது நல்லது. மேலும், கூலண்ட் அளவை சரியாக இருக்கிறதா என பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் தவறு நேர்ந்திருப்பின், உடனடியாக அருகில் உள்ள மெக்கானிக்கிடம் சென்று சரிசெய்துகொள்ளவும்.

காரின் உட்புறத்தில் அதிக வெப்பம் ஏற்படாமல் இருக்க விண்ட் சீல்டுகளை (Wind Shield) பயன்படுத்துவது நல்லது. மேலும், இது கீறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். கோடை வெயிலில் லெதர் இருக்கைகள் சேதமடையாமல் இருக்க லெதர் கண்டிஸ்னர் (Leather Conditioner) பயன்படுத்த வேண்டும். முக்கியமாக கார்களின் டயர்களை அடிக்கடி பரிசோதித்து கொள்வது அவசியமாகும்.