Thiruvarur Police: நள்ளிரவில் அதிரடி காண்பித்த திருவாரூர் காவல்துறை; ரௌடி என்கவுன்டரில் சுட்டுப்பிடிப்பு.!

கொலை வழக்கில் தொடர்புடைய ரௌடியை திருவாரூர் காவல்துறையினர் நள்ளிரவு நேரத்தில் சுட்டுப்பிடித்தனர். இந்த சம்பவத்தில் காவலர் ஒருவரும் காயம் அடைந்தார்.

Rowdy Nirmal Raj | Gun Fire File Pic (Photo Credit: Facebook)

ஆகஸ்ட் 17, நீடாமங்கலம் (Thiruvarur News): திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் (Needamangalam) பகுதியை சேர்ந்தவர் மனோ நிர்மல் ராஜ். இவர் அப்பகுதியில் ரௌடியாக வளம் வருகிறார். கடந்த 2003ம் ஆண்டு திருத்துறைப்பூண்டியை சேர்ந்த திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான மாரிமுத்து என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியே வந்த நிலையில், அவரை கொலை செய்த கும்பலில் மனோவும் இடம்பெற்றுள்ளார். அதேபோல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தமிழரசன் என்பவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்திலும் மனோ குற்றவாளியாக இருந்துள்ளார். இதனால் அவரை அதிகாரிகள் தேடி வந்துள்ளனர். இதனிடையே, இன்று மனோ நிர்மல்ராஜ் நீடாமங்கலம் பகுதியில் இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. Son Kills Mother: பெற்ற தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த மகன்.. தென்காசியில் கொடூரம்..! 

குற்றவாளி சுட்டுப்பிடிப்பு:

நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மனோவை கைது செய்ய முற்பட்டுள்ளனர். அப்போது, காவலர் விக்னேஷை கத்தியால் வெட்டிய மனோ தப்பிச்செல்ல முயற்சித்துள்ளார். இதனால் அதிகாரிகளின் பாதுகாப்பு கருதி, நிகழ்விடத்தில் இருந்த உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் துப்பாக்கியால் சுட்டு குற்றவாளியை பிடித்தார். இந்த சம்பவத்தில் காயமடைந்த காவலர் அவசர ஊர்தி மூலமாக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். என்கவுண்டரில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த ரௌடியும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெய்குமாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் நிகழ்விடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement