Road Accident: பேருந்தை முந்தி செல்ல முயன்றதால் சோகம்.. சக்கரத்தில் சிக்கி 2 சிறுவர்கள் பலி..!
விழுப்புரத்தில் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 30, விழுப்புரம் (Villupuram News): புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பூமியான்பேட்டை பாவாணர் நகரை சேர்ந்தவர் காமாட்சி. இவரது மகன் திவேஷ் (வயது 17) மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், திவேஷ் மற்றும் அவரது நண்பர் கிறிஸ்டோபர் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கடலூர் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, வாகனத்தை ஓட்டி வந்த திவேஷ் விழுப்புரம் மாவட்டம், அரியாங்குப்பம் சுங்கச்சாவடி (Toll-Gate) பகுதியில் தனியார் பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்றார். வானிலை: இன்று வெளுக்கப்போகும் கனமழை; நாளைய வானிலை என்ன? வானிலை அறிவிப்பு இதோ.!
பேருந்து சக்கரத்தில் சிக்கி இருவர் பலி:
அப்போது, நிலை தடுமாறி சாலையில் விழுந்த அவர், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த அவரது நண்பர் கிறிஸ்டோபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.