Accenture Layoff: அக்சென்சர் பணியாளர்களுக்கு அடுத்த ஆப்பு; 83 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய தலைமை முடிவு.!
தொழில்நுட்ப உலகில் மென்பொருள் சார்ந்த பணிகளை திறம்பட செய்யும் நிறுவனங்களில் முதன்மையானது அக்சன்சர்.
நவம்பர் 03, புதுடெல்லி (Technology News): அயர்லாந்து நாட்டினை தலைமையிடமாக கொண்டு, 7.38 இலட்சம் சர்வதேச பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வரும், தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய நிறுவனம் அக்சென்சர் (Accenture).
தொழில்நுட்ப உலகில் மென்பொருள் சார்ந்த பணிகள், தொழில்நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குதல், எதிர்கால தொழில்நுட்ப கண்டுபிடிப்பு என அந்நிறுவனம் தகவல் தொழில்நுட்ப விஷயத்தில் முதன்மை நிறுவனமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்நிறுவனம் தனது 83 பணியாளர்களை வரும் டிசம்பர் 4 2023 முதல் மே மாதம் 28, 2024 வரை அடுத்தடுத்து பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. Soya Mealmaker: மீல்மேக்கர் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.. தீமையும் உள்ளது.. தெரிஞ்சிக்கோங்க.!
முதன்மை நிர்வாகிகள் முதல், பாதுகாப்பு ஆய்வாளர்கள் வரை அவரவரின் பணித்திறனுக்கேற்ப, தகுதி உடையோர் பணியில் தொடர அனுமதிக்கப்பட்டு, பிறர் பணியிலிருந்து படிப்படியாக நீக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மாதவாரியாக நோட்டீஸ் அனுப்பவும் அந்நிறுவனத்தின் தலைமை திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய நிறுவனமான அக்சென்சர் 120 நாடுகளில் கிளைகள் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.