Best Dating Apps: ஆன்லைனில் டேட்டிங் ஆப் யூஸ் பண்றிங்களா? என்னென்ன ஆப்கள் உள்ளது? எதெல்லாம் பெஸ்ட்?.. பார்ப்போம் வாங்க..!
Dating App (Photo Credit: Pixabay)

ஜனவரி 29, சென்னை (Chennai): டேட்டிங் ஆப்களின் மேலுள்ள பயம் விலகி அனைவரும் இந்த ஆப்களைப் சமீப காலமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இது சமூக வலைதளங்களைப் போன்றே பலரும் டேட்டிங் ஆப்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதை புது நண்பர்களை உருவாக்குவதற்கும், தனிமையைப் போக்குவதற்கும், பழைய காதல் தோல்வியிலிருந்து வெளிவருவதற்கும், புது காதலைக் கண்டு பிடிப்பதற்கும் இந்த டேட்டிக் ஆப்களை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் பிரபலமாக உள்ள டேட்டிங் ஆப்களை பற்றி உங்களுக்கு அளிக்கிறோம்.

டிண்டர்: டேட்டிங் ஆப்களை முதல் முதலில் பயன்படுத்துவோருக்கு டிண்டர் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். இந்தியர்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஆப்பாக டிண்டர் உள்ளது. டிண்டர் தான் ஸ்வைப் செய்யும் ஆப்ஷனைக் கொண்டு வந்தது. டிண்டர் பிரபலாக இருப்பதற்கான காரணம் எளிமையாக பதிவு மற்றும் பயன்படுத்தும் முறை மற்றும் தனிபட்ட தகவல்களின் பாதுகாப்பும் தான். இந்த ஆப்பை 10 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். ICC Reprimands Jasprit Bumrah: இந்திய இங்கிலாந்து டெஸ்ட் போட்டி.. ஜஸ்பிரித் பும்ராவை கண்டித்த ஐசிசி.. காரணம் என்ன?.!

டிண்டரில் பிரீமியம் ஆப்ஷனும் உள்ளது. தேவையெனில் இதை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் நமது சூப்பர் லைக் ஆப்ஷன் இருப்பதால் விரைவிலேயே தகுந்த மேட்சை கண்டறியலாம். மேலும் இது விளம்பரத்தை ஹைட் செய்து லைக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். மேலும் மேட்ச் செய்வதற்கு முன்பே மேசேஜ் அனுப்ப வழிவகுக்கிறது. மேலும் தங்களுக்கு அருகில் உள்ள டிண்டர் புரோஃபைல்களை காண்பிக்கிறது. வேறு லோகேஷனை செட் செய்தும் அங்குள்ள புரோஃபைல்களை தேர்வு செய்யலாம். மேலும் யார் உங்களுடைய புரோஃபைகளை பார்க்க வேண்டும் எனவும் தேர்வு செய்யலாம்.

பம்பிள்: இந்த பம்பிள் ஆப் இந்தியர்களின் மத்தியில் மிகப் பிரபலமாக இருக்கும் ஒரு ஆப் ஆகும். இது பொதுவாக சொல்லப்படும் லேடீஸ் ஃப்ஸ்ட் கான்சப்டைக் கொண்டிருக்கும். இது மேட்சாகும் இருவரில் பெண்கள் தான் முதலில் மேசேஜ் அனுப்ப முடியும். இதற்கு ஆண்கள் 24 மணி நேரத்திற்குள் ரிப்ளே செய்ய வேண்டும். அதற்கு மேல் மெசேஜ்கள் மறைந்து விடும். மேலும் இதில் உள்ளவர்கள் அனைவரின் கணக்கும் வெரிஃபைட் செய்யப்பட்டது. இதன் பிரீமியம் பல ஃபில்டர் ஆப்ஷன்கள் வழங்குகிறது. மேலும் சூப்பர் ஸ்வைப், ஹிட்டன் சர்ச், ரீமேட்சஸ் போன்ற வசதிகளும் உள்ளது.

ஓகே க்யூபிட்: ஓகே க்யூபிட் உலகம் முழுவதும் மிக எளிமையாக இருக்கும் ஆப்களின் விருப்பத் தேர்வுகளில் ஒன்றாக இருக்கிறது. இதில் லோகேஷனை மட்டும் பாராமல் அவர்களில் இண்ட்ரஸ்ட் மற்றும் ஹேபிட்களைக் கொண்டு புரோஃபைல்கள் காட்டும். ஓகே க்யூபிட் டேட்டிங் ஆப் ஃபீரீயாக பயன்படுத்தும் முறையில் உள்ளது. இதில் பூஸ்ட் மோட் இருப்பதால் தேவைப்படும் போது புரோஃபைல்களின் எண்ணிக்கையை அதிகரித்து தேர்வு செய்யலாம். மேலும் சுப்பர் லைக், ரீட் சீன் ஆப்ஷன்கள் உள்ளது. KH 233: கமல், வினோத் இணையும் புதிய படம்.. ட்ராப் ஆகியதா? இல்லையா?.!

ஹேப்பன் ஆப்: ஹேப்பன் ஆப் (Happn) பிற டேடிட்ங் ஆப்களிடமிருந்து வித்தியாசப்படுவதற்கு காரணம், இந்த டேடிங் ஆப் வழியில் கடந்து செல்பவர்களின் ஹேப்பன் புரோஃபைல்களையும் காட்டும். இருவரும் இன்ட்ரஸ்ட் செய்யும் போது இது உடனடியாக மீட் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும். இது பலருக்கும் பிடித்த பாதுகாப்பான டேட்டிங் ஆப்பாக உள்ளது. இதில் பீரிமீயம் அவசியமில்லை என்றாலும் பிரீமியத்தில் பல ஆப்ஷன்களை அளிக்கிறது. மாதத்திற்கு 5 கால்கள், லைக் செய்தவரின் விவரம், ஆட் ஃப்ரீ, கண்ட்ரோல் மோட்கள் உள்ளது.

ஹிங்ச்: ஒரு உண்மையான நல்ல ரிலேஷன் எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த ஹிங்ச் ஆப் சிறந்ததாக இருக்கும். இது பல ஃபுரோஃபைல்களை வழங்காமல் குறைந்த அளவிலேயே வழங்குகிறது, இதனால் ஒரு நிலையான ரிலேஷன்ஷிப்பை வேகமாக கண்டுபிடிக்கலாம். இதில் பீரிம்மியமில் ஒரு உண்மையான பார்ட்னரை கண்டுபிடிக்கலாம். இதில் உங்களுக்கு பிடித்த தேர்வுகளைப் போலவே பார்னரைக் கண்டறியலாம். மேலும் பயோ மற்றும் போட்டோகளுக்கு தனியாக லைக்குகள் அளிக்க முடியும். இதனால் வேகமான அட்டென்ஷன் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஐஸ்சிலே: டேடிங் ஆப்பில் உள்ல ஸ்வைப் செய்யும் வசதி இல்லமால் வேண்டும் என்றால் இந்த ஆப் சிறந்தது. இந்த ஐஸ்சிலே ஆப் (Aisle) டேட்டிங் ஆப்பாகவும், மேட்ரீமோனியல் ஆப்பாகவும் செயல்படுகிறது. தனிதனியாக செயலியை பதிவிறக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் பிற நாடுகளில் இருந்தும் புரோஃபைல்களை வழங்குகிறது. கூடுதலாக பல ஆப்ஷன்களை தருகிறது பீரீமியம் அக்கவுண்டில். இது ஒரு ஹேண்ட்பிக்டு மேட்களை தரும். மேலும் பிறரின் புரோஃபைல்களின் போட்டோகளுக்கு லைக்கு மற்றும் கமெண்டு செய்யும் வசதியும் உள்ளது. UPI Digital Bus Ticket: இனி யுபிஐ மூலம் பஸ் டிக்கெட்.. சென்னை மக்கள் குஷி..!

மேட்ச். காம்: இந்த செயலியில் ஸ்வைப் மற்றும் மெசேஜிங்கிங் அம்சம் உள்ளது. ஒரு உண்மையான திருமண உறவிற்கு இந்த செயலி வழிவகுக்கும். இதில் சற்றும் தொகை அதிகமாக தெரிந்தாலும் அதற்கேற்ப ஒரு உண்மையான உறவை கண்டறியலாம். பிரீமியத்தில், நீண்ட கால சீரியஸ் உறவிற்கு உள்ள புரோஃபைல்கலை காண்பிக்கும். மேலும் பீரிமியத்தில் உள்ளவர்கள் மட்டும் உள்ளவர்களும் மெசேஜ் செய்ய முடியும். ஒன் ஆன் ஒன் சாட்டிங்கையும் வழங்கிறது. மேலும் சில வசதிகளும் உள்ளது.

ட்ரூலி மேட்லி: உலகில் உள்ள அனைத்து இந்தியர்களையும் இணைக்கும் செயலியாக ட்ரூலி மேட்லி ஆப் உள்ளது. பாதுகாப்பான ஆப்களில் ஒன்றாக உள்ளது. மேலும் மேட்ச்களை அவர்களில் இண்ட்ரச்டுகளை பொருத்தும் கொடுக்கலாம். பீரிமியத்தில் அதிக அளவு மேட்சிங் புரோஃபைல்கள் கிடைக்கும்.

தில்மில்: இந்த செயலி பெண்களுக்கு தெற்காசிய நாடுகளில் ஆண்களின் புரோஃபைகளை வழங்கிறது. வெளிநாட்டில் பாட்னரை தேடும் பெண்களுக்கு இது பொருத்தமானதாகும். நீண்டகால உறவிற்கு வழிவகுக்கிறது. பீரிமியம், விஐபி, எலைட் என பல வர்ஷன்கள் உள்லது. அவைகளுக்கு ஏற்ப பல வசதிகளும் கிடைக்கிறது. ஒரு நாள் சலுகைகள் கூட கிடைக்கின்றன. இதில் இந்திய ஆண்களுக்கு அனுமதி இல்லை. வெளிநாட்டில் வாழும் இந்திய ஆண்களுக்கு அனுமதி உண்டு. Road Accident: செங்கல்பட்டில் அடுத்தடுத்து 5 கார்கள் மோதி விபத்து... போக்குவரத்து நெரிசலால் ஏற்பட்ட விபரீதம்..!

ஹர்: ஹர் (Her) ஆப், ஓர் பாலின பெண்களுக்கான ஆப்கலில் சிறந்ததாக உள்ளது. ஆனால் லெஷ்பியனாக இருக்கும் பெண்கள் தங்கள் பார்ட்னரை வெளியுலகில் அடையாளம் காண சிரமப்படுவதுண்டு. அதை இந்த செயலி எளிமையாக்குகிறது. பிற டேட்டிங் ஆப்களை போன்றே இதில் அனைத்து ஆப்ஷன்களும் இருக்கும். இதில் தங்களுக்கான பெண்களை கண்டறியலாம். இது ஃபீரி சர்வீசை வழங்கிகிறது.