ஜனவரி 29, ஹைதராபாத் (Cricket News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி (IND vs ENG Test Series 2024), ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. இதில் முதல் டெஸ்ட் போட்டி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களும், இந்திய அணி 436 ரன்களும் எடுத்தது. இதை அடுத்து 190 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 420 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடர்ந்து சொதப்பலாக விளையாடி, 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. KH 233: கமல், வினோத் இணையும் புதிய படம்.. ட்ராப் ஆகியதா? இல்லையா?.!

ஜஸ்பிரித் பும்ராவை கண்டித்த ஐசிசி: இந்நிலையில் போட்டியின் போது இங்கிலாந்து வீரர் ஒல்லி போப்புடன் (Ollie Pope) தகாத முறையில் தொடர்பு கொண்டதற்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை (Jasprit Bumrah) ஐசிசி கண்டித்துள்ளது. அதாவது நேற்றைய போட்டியின் பொழுது 81 ஆவது ஓவரில் பும்ரா பந்து வீச களம் இறங்கினார். அப்போது இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அந்த சமயம் ஒல்லி போப் ரன் எடுக்க ஓடும் பொழுது, பும்ரா அவர் ஓடும் பாதையில் குறுக்கே நின்றுள்ளார். இதன் காரணமாகவே, ஐசிசி (ICC) இவரை கண்டித்து உள்ளது. இது ஒரு விதி மீறல் ஆகும்.