WhatsApp Spam Calls: வெளிநாட்டு நம்பரில் அழைத்து வாட்ஸப்பில் புதிய வகை மோசடி; இந்தியர்களை பதறவைத்த சம்பவம்.. நடவடிக்கை எடுத்த மத்திய அரசு..!

அதனை மத்திய அரசு தனது தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூலமாக திறம்பட செய்கிறது.

WhatsApp Spam Call (Photo Credit: Pixabay)

மே 11, புதுடெல்லி (Technology News): கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளான விஷயங்களில் முக்கியமான ஒன்று WhatsApp Spam Calls என்ற வாட்சப் மோசடி அழைப்புகள். தானியங்கு முறையில் பலருக்கும் ஒரே நேரத்தில் தொடர்பு கொண்டு பேசுவதை போல மாயையை ஏற்படுத்தி, அதன்மூலமாக தனிப்பட்ட நபர்களின் தகவலை திருடும் செயல்கள் அரங்கேறி வருகின்றனர். இவை குறித்த பல இணையவழி புகார்கள் சமீபத்தில் அதிகமாக பெறப்பட்டது.

குறிப்பாக 2.44 பில்லியன் பயனர்களை கொண்ட வாட்சப் நிறுவனம், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை ஒருங்கே பெற்ற மெட்டா (Meta) நிறுவனத்தின் அங்கம் ஆகும். நாளொன்றுக்கு 2000 மில்லியன் பயனர்கள் வாட்ஸப்பை உபயோகம் செய்கின்றனர். இந்தியாவில் 487 மில்லியன் மக்கள் வாட்சப்பை உபயோகம் செய்கின்றனர். இவர்கள் தங்களின் ஒவ்வொரு உரையாடலையும் வாட்சப்பில் பலருக்கும் அனுப்புகின்றனர். Summer Heat: கோடை வெயிலை சமாளிக்க முக்கியமாக நாம் செய்ய வேண்டிய 10 விஷயங்கள் இதுதான்.. மக்களே தெரிஞ்சிக்கோங்க.!

இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே சர்வதேச நாடுகளான இந்தோனேஷியா (+62), வியட்நாம் (+84), மலேஷியா (+60), எத்தியோப்பியா (+251), கென்யா (+254) உட்பட பிற நாடுகளின் எண்களில் இருந்து வாட்சப் மூலமாக பலருக்கும் அழைப்புகள் வந்தன. இந்த மோசடி அழைப்புகள் தகவல் திருட்டு, ஆபாச குறுஞ்செய்தி அல்லது ஆபாச நடவடிக்கை தொடர்பான பல்வேறு விஷயங்களை பெற்றிருந்தது.

WhatsApp File Picture (Photo Credit: Pixabay)

இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்துவந்த மத்திய அரசு, வாட்சப் செயலியை நிர்வகித்து வரும் மெட்டா குழுமம் மற்றும் வாட்சப் நிறுவனத்திற்கு மேற்கூறிய சம்பவம் தொடர்பாக சம்மன் வழங்கியது. இதுகுறித்த விளக்கம் அளித்த வாட்சப் நிறுவனம், புகார் தொடர்பாக தகுந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. 50% மோசடி அழைப்புகள் கண்டறியப்பட்டு துண்டிக்கப்பட்டுவிட்டன. மேற்படி தொடரும் அழைப்புகளும் கண்காணிக்கப்பட்டு துண்டிக்கப்படும்.

இவ்வாறான செயல்களை எதிர்காலத்தில் குறைக்க செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திரத்தின் கற்றல் திறன் (Machine Learning) போன்ற விஷயங்களில் அமைப்புகளை மேம்படுத்தவுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது. வாட்சப்பை பொறுத்தமட்டில் இந்தியா மிகப்பெரிய சந்தை என்பதால், அதன் பயனர்கள் விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டிய காரணத்தால் வாட்சப் நிறுவனமும் தனது பணியை திறம்பட செய்து வருகிறது. Chennai RMC Update: இன்று 11 மாவட்டங்களில் கனமழை; வெளுத்து வாங்கப்போகும் கடும் வெயில்… எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.! 

Mobile Network (Photo Credit: Pixabay)

இன்று மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், உங்களுக்கு சம்பந்தம் இல்லாத அல்லது அறியப்படாத சர்வதேச அலைபேசி எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் அதனை எடுக்க வேண்டாம். அந்த செல்போன் நம்பரை புகார் அளியுங்கள் என்று கூறி இருந்தார். இவ்வாறான அழைப்புகளை அனுப்பும் மர்ம நபர்கள், அவர்கள் மோசடி செயலை செய்ய நாம் காரணமாக இருக்க கூடாது.

அதனை தவிர்ப்பது மேற்படியான அழைப்புகள் பெறப்பட்டால் புகார் அளிக்க வேண்டும். அவர்களுக்கு நாம் பதில் அனுப்புவது நமது தகவலை திருட நாமே வழிவகை செய்துகொடுத்தார் போல அமையும். ஏனெனில் அவர்கள் நமது விபரங்களை திருடி, பணம் தொடர்பான மோசடியில் ஈடுபடவும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், கவனமாக செய்லபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.