Remove Apps Form Phone: அச்சச்சோ.. இந்த Apps உங்க மொபைலில் உள்ளதா?.. உடனே டெலீட் பண்ணுங்க.. எச்சரிக்கை கொடுத்த கூகுள்.!
கூகுளால் நிராகரிக்கப்படும் செயலிகள் அல்லது மாநில/மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள செயலிகளை நம்மால் உபயோகம் செய்ய இயலாது.
டிசம்பர், 10: கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) பல செயலிகள் குவிந்து கிடக்கின்றன. இதன் பாதுகாப்புத்தன்மை தொடர்பான தகவலை அவ்வப்போது கூகுள் பகிர்ந்துகொண்டு இருக்கும். கூகுளால் நிராகரிக்கப்படும் செயலிகள் அல்லது மாநில/மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள செயலிகளை நம்மால் உபயோகம் செய்ய இயலாது.
மோசடி கும்பல் பல செயலிகளை பதிவேற்றி அதன் மூலமாக மக்களை ஏமாற்றி அல்லது உளவுபார்த்து வருகிறது. இதனால் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும் முன்பு அதன் பாதுகாப்புத்தன்மை மற்றும் செயல்பாடுகள் போன்றவற்றை அறிந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். Crypto Currency: கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?… நொடியில் இலட்சாதிபதியும் ஆகலாம், தெருக்கோடியில் நிற்கலாம்.. காரணம் என்ன?.!
சில வகை செயலிகள் நமது செல்போனுக்கு தீங்கு ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும். அவை நமது சமூக வலைதளப்பக்கத்தின் தரவுகள், வங்கி தொடர்பான விபரங்கள் திருடும். இவ்வாறான பட்டியலில் கூகுள் நிறுவனத்தால் கூறப்பட்டுள்ள கீழ்காணும் செயலிகள் ஆபத்தானவை என வகிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,
- File Manager Small, Lite
- Recover (Audio, Images & Videos)
- My Finances Tracker
- Zetter Authentication
- Codice Fiscale
மேற்கூறியுள்ள செயலிகள் உங்களின் செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டு இருந்தால், அதனை உடனடியாக டெலிட் செய்வது நல்லது. கடந்த வாரத்தில் கூகுள் 15 செயலிகள் பட்டியலை ஆபத்து கொண்ட செயலிகள் என தெரிவித்துள்ளது. கீழ்காணும் செயலிகள் உங்களின் போன் பேட்டரி, டேட்டா போன்றவற்றை உறிஞ்சு விரைந்து காலி செய்கிறது.
- EzDica
- High-Speed Camera
- Calculator
- Flashlight+
- Calendar notepad
- Flashlight
- BusanBus
- Ez Notes
- Quick Note
- Smart Task Manager
- Joycode
- Instagram Profile Downloader
- Currency Converter
- K-Dictionary
- Flashlight+
மேற்கூறியுள்ள 15 செயலியில் ஏதேனும் ஒன்றினை நீங்கள் பதிவிறக்கம் செய்து வித்திருந்தால், அதனை டெலீட் செய்வது நல்லது. பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்தாலும் கவனத்துடன் இருப்பது நல்லது.