Google Play Store: ஆன்லைன் லோன் மோசடி தொடர்பான 3,500 செயலிகளுக்கு தடை விதித்தது கூகுள்.. அதிரடி நடவடிக்கை.!
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நமக்கு உதவி செய்ய கிடைத்த செயலிகளை நிர்வகிக்கும் சில நபர்களின் பேராசை புத்தியால் அப்பாவி மக்களுக்கு பல துயரங்கள் நிகழுகின்றன.
ஏப்ரல் 30, கலிபோர்னியா (World News): சமூக வலைத்தளங்களின் (Social Media & Website) பயன்பாடுகள் அதிகரிக்க தொடங்கியதில் இருந்து, அதனை வைத்து திருட்டுத்தனமாக மோசடி (Online Scam) செய்து பணம் சம்பாதிக்கும் செயலும் நடந்து வருகின்றன. இவற்றை குறைக்க பல செயல்திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மூலமாக பல மோசடி செயலிகள் வழியே பல பண மோசடி தொடர்பான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் பல அப்பாவி உயிர்களும் பலியாகியுள்ள நிலையில், கூகுள் (Google) பலநாட்டு அரசுகளின் கோரிக்கையை ஏற்று அவ்வப்போது மோசடி செயலிகளை கண்டு தடை விதித்து வருகிறது.
இதற்கிடையில், தற்போது 3,500 க்கும் அதிகமான லோன் மோசடி (Loan Scam Apps) செயலிகளை கண்டறிந்துள்ள கூகுள் நிறுவனம், அதனை தடை செய்துள்ளது. அதேபோல, கடந்த 2022ல் 14.30 இலட்சம் மோசடி கணக்குகளும் தடை செய்யப்பட்டுள்ளன. கூகுளின் தனியுரிமை விதிமுறையை மீறியதாக 1.73 இலட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. Netherlands Sperm Scandal: 550 குழந்தைகளுக்கு தந்தையான நபர்; இனி அதை செய்ய கூடாது; நீதிமன்றம் எச்சரிக்கை.. நடந்தது என்ன?..!
CCI என்ற Competition Commission of India அமைப்பு மூலமாக விதியை மீறி இந்திய மண்ணில் செயல்படும் செயலிகள் கண்டறியப்பட்டு, அவை கூகுளின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு முடக்கப்பட்டன. அதேபோல, கூகுள் முடக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை கண்காணித்து, அவர்களின் ஸ்மார்போன்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.