மார்ச் 13, தூத்துக்குடி (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயபால். இவரின் மனைவி காளியம்மாள். தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையே, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து ஒன்றில் ஜெயபால் காலமானார். இதற்கு பின் தனியாக வசித்து வந்த காளியம்மாளுக்கு, அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 38) என்பவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர் அப்பகுதியில் செல்வந்தராக வாழ்ந்து வருபவர் ஆவார்.

புதிய வாழ்க்கை தொடங்கிய தம்பதிகள்: ராமச்சந்திரன் - காளியம்மாள் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மாற, இருவரும் ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை தொடங்கி இருக்கின்றனர். காளியம்மாளுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். ராமச்சந்திரனும் காளியம்மாளை விட வயதில் குறைந்தவர் ஆவார், முதல் திருமணம் ஆகும். இதனால் ராமச்சந்திரனின் குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

பெண் மர்ம நபர்களால் கொலை: இந்நிலையில், கடந்த மார்ச் 29ம் தேதி காளியம்மாள் தனது வீட்டின் பின்புறம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் பிணமாக கிடந்தார். இதனைக்கண்டு பதறிப்போன குழந்தைகள் கதறியழ, அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்துவிட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கொலை நடந்துள்ளதை உறுதி செய்து குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தினர். Minor Girl Gang Raped: திருவிழாவுக்கு வந்த 17 வயது சிறுமியை கடத்திச்சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம்; திருப்பூரில் பதறவைக்கும் சம்பவம்.! 

அதிர்ச்சி திருப்பம்: நிகழ்விடத்திற்கு அருகே இருந்த கண்காணிப்பு கேமிராக்களும் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, சம்பவத்தன்று கீழ விளாத்திகுளம் கிராமத்தை சேர்ந்த ஜெயபாலன் என்பவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் காளியம்மாள் வீடு உள்ள பகுதியில் சுற்றியது உறுதியானது. இதனையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலமானது.

சொத்துக்காக நடந்த பயங்கரம்: அதாவது, இராமச்சந்திரனின் தந்தையான கோயம்புத்தூரில் சொந்தமாக பெரிய அளவில் இரும்புக்கடை நடத்தி வருகிறார். அவருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்களும் இருந்துள்ளன. ராமச்சந்திரனுக்கு விஜயலட்சுமி என்ற சகோதரியும் இருந்துள்ளார். 28 வயதாகும் தம்பி, தன்னைவிட 10 வயது அதிகம் உள்ள காளியம்மாளை திருமணம் செய்து, அவரது முதல் கணவருக்கு பிறந்த குழந்தைகளை கவனித்துக்கொண்டு வாழ்ந்தது விஜயலட்சுமிக்கு பிடிக்காமல் வேதனையில் இருந்துள்ளார். சொத்தும் காளியம்மாளுக்கு சென்றுவிடும் என ஆத்திரமும் அடைந்துள்ளார்.

திட்டம்போட்டு பக்கா ஸ்கெட்சுடன் நடந்த கொலை: இந்த வேதனை மற்றும் ஆத்திரம் ஒருகட்டத்தில் காளியம்மாளை கொலை செய்ய திட்டமிட வைத்துள்ளது. இதனையடுத்து, தனக்கு அறிமுகமான ஜெயபால், அவரின் தோழி கவிதா, நண்பர் விவேக், கலைச்செல்வன் ஆகியோருடன் சேர்ந்து சதித்திட்டத்தை அரங்கேற்றி கொலை செய்துள்ளனர். கொலைக்கு முன்பணமாக ரூ.70 ஆயிரம் பெறப்பட்டு, ஜெயபால் காளியம்மாள் வீட்டினை நோட்டமிட்டு வந்துள்ளார். காளியம்மாளுக்கு நாய்கள் மீது பிரியம் என்பதால், பல நாய்களுக்கு உணவளித்து வந்துள்ளார்.

குற்றவாளிகள் கைது: இதனையடுத்து, கால்நடை மருத்துவர் போல வேடமிட்ட ஜெயபால், நாய்களுக்கு ஊசி செலுத்த வந்துள்ளதாக கூறியுள்ளார். வளர்ப்பு நாய்களை ஊசிபோட காளியம்மாள் தயார்படுத்தியபோது, காளியம்மாள் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்த ஜெயபால் அங்கிருந்து தப்பி வந்துள்ளார். மேற்கூறிய சம்பவத்தை வாக்குமூலமாக பதிவு செய்த அதிகாரிகள், ஜெயபால் கொடுத்த தகவலின் பேரில் விஜயலட்சுமி, கவிதா, விவேக், கலையரசன் ஆகியோரையும் கைது செய்தனர்.