5G Smartphones: 5G ஸ்மார்ட்போன்கள் வாங்க தடபுடலாக தயாராகும் இந்தியர்கள்; வெளியான அதிரடி ரிப்போர்ட்.. கொண்டாட்டத்தில் செல்போன் கம்பெனிகள்.!
மேலை நாடுகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப புரட்சியில் போட்டிபோட்டுக்கொண்டு இருக்கும் இந்தியா, தொடர்ந்து தனது தகவல் தொழில்நுட்பங்களை புதுமைப்படுத்த பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மே 07, புதுடெல்லி (Technology News): தொழில்நுட்பங்களில் புதுமை வளரவளர, நாமும் அதனை தேடி பயணித்துக்கொண்டு இருக்கிறோம். இன்றளவில் செல்போன்கள் (Smartphone) பயன்பாடு என்பது தவிர்க்க இயலாத அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகிவிட்டது.
செல்போன்கள் அறிமுகமானதை தொடர்ந்து, அதன் வாயிலாக செல்போன் நெட்ஒர்க் (Network) நிறுவனங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. இவை தற்போதைய நவீன உலகில் முழு வணிகமயமாகி இருக்கின்றன.
நெட்ஒர்க் வேகத்தை மேலை நாடுகளை போல ஏற்படுத்த இந்திய அரசு தேவையான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியாவில் நெட்ஒர்க் 4G-யில் இருந்து 5G-ஆக (5G Mobiles) மாறி இருக்கிறது. Mumbai Minor: சத்ரபதி சிவாஜி குறித்து அவதூறு தகவலை பதிவிட்ட சிறுவன் கைது; மும்பை காவல்துறை அதிரடி.!
இதற்காக பிரத்தியேக செல்போன்களும் சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. நாம் இன்று வரை 4G ஸ்மார்ட்போன் உபயோகம் செய்து வருகிறோம் என்றால், அதனை வைத்து 5G இன்டர்நெட் வேகம் பெற இயலாது. அதற்கேற்ப செல்போன் அமைப்புகள் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற நிலை இருக்கிறது.
5G செல்போன் வாங்கிவிட்டால் அதனை வைத்து 5G வேகம் கொண்ட இன்டர்நெட் வசதியை நாம் பெறலாம். இந்தியர்கள் 5G யின் அறிமுகத்திற்கு முன்பு பெருமளவு 4G ஸ்மார்போன்களை உபயோகம் செய்து வந்த நிலையில், தற்போது 5G ஸ்மார்ட்போன்களை அதிகளவு வாங்க விரும்புவதாக ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன.
அதேபோல, சுமார் 72% இந்தியர்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரத்திற்கும் இருக்கும் 5G ஸ்மார்ட்போன்களை வாங்க விருப்புகின்றனர் என்பது ஆய்வுகளின் மூலமாக தெரியவந்துள்ளது. சுமார் 13% பயனர்கள் தாங்கள் தற்போது உபயோகம் செய்யும் ஸ்மார்போனையே தொடர்ந்து பயன்படுத்த நினைக்கின்றனர்.