Infinix Note 40 5G: இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட் போன் உலக சந்தையில் அறிமுகம்..! முழு விவரம் உள்ளே..!

இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட் போன் பல சிறப்பம்சங்களுடன் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Infinix Note 40 5G (Photo Credit: @TurboSixer9302 X)

மே 23, சென்னை (Technology News): இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G) ஸ்மார்ட் போனை தற்போது உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே, இந்த தொடரில் ​​infinix Note 40 pro 5ஜி மற்றும் Note 40 pro plus 5G ஸ்மார்ட் போன்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. மேலும், 4G மாடல்களான Infinix Note 40, Note 40 Pro ஏற்கனவே உலக சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. அதன் வரிசையில், Infinix Note 40 சீரிஸின் 5ஜி ஸ்மார்ட் போனின் முழு விவரங்களையும் இதில் பார்ப்போம்.

விலை: இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட் போன் பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் மாறுபாட்டின் விலை PHP 13,999 என கூறப்படுகின்றது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 20,000 ரூபாய் ஆகும். பிலிப்பைன்ஸில் கருப்பு, தங்கம் மற்றும் பச்சை நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து எந்த தகவலும் உறுதியாக கூறவில்லை. Heart Health Tips: இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!

விவரக்குறிப்புகள்: இதில், 6.78 இன்ச் FullHD + டிஸ்ப்ளே, AMOLED பேனலில் கொடுக்கப்பட்டுள்ளது. XOS 14 உடன் இணைந்து செயல்படும், ஆண்ட்ராய்டு 14-யில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், MediaTek Dimensity 7020 8-core சிப்செட் உள்ளது. OIS தொழில்நுட்பத்தில் செயல்படும் போனின் பின் பேனலில் F/1.75, 108MP பிரதான கேமரா சென்சார் உள்ளது. இதனுடன், இரண்டு 2MP லென்ஸ்கள் பின்புற கேமரா அமைப்பில் உள்ளன. மேலும், 32MP செல்பி கேமரா மற்றும் இரட்டை ஃபிளாஷ் லைட்டும் வழங்கப்படுகிறது.

இந்த போனில், 5,000mAh பேட்டரி திறனுடன், 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் வந்துள்ளது. மேலும், இதில் 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வசதியும் உள்ளது. JBL டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை ஆதரிக்கின்றது. புளூடூத் மற்றும் வைஃபை உடன், NFC மற்றும் OTG போன்ற அம்சங்களும் உள்ளன. இந்த ஸ்மார்ட் போன IP53 சான்றிதழ் பெற்றுள்ளது. இது தண்ணீர் மற்றும் தூசியிலிருந்து ஸ்மார்ட் போனை பாதுகாக்கின்றது.