Washing Machine Maintenance Tips: வாஷிங் மெஷினின் ஆயுளை நீட்டிக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்..!
வீட்டில் அன்றாட பயன்படுத்தும் வாஷிங் மெஷினை எப்படி பராமரிப்பது என்பதனை பற்றி இந்த பதிவில் காண்போம்.
ஜூலை 23, சென்னை (Technology News): வாஷிங் மெஷின்கள் தற்போது எல்லா வீடுகளிலும் அத்தியாவசமாக மாறிவிட்டது. வீட்டில் பெரும் வேலையாக துணி துவைப்பது இருந்து வருகிறது. அதனை எளிய முறையில் விரைவாக முடிக்க வாஷிங் மெஷின் (Washing Machine) பயன்படுகிறது. அதில் துணிகளை சுத்தம் செய்தல், உலர்த்துதல் மற்றும் பிடுங்குதல் உட்பட பலவிதமான செயல்பாடுகளை செய்ய முடிகிறது. அப்படிப்பட்ட வாசிங் மெஷினை நீண்ட காலம் உபயோகிக்க நாம் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வாஷிங் மெஷின் பராமரிப்பு வழிமுறைகள்:
வாஷிங் மெஷினில் ஓவர்லோட் செய்வது இயந்திரத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். மெஷினிற்கு ஏற்ற அளவில் துணிகளை போட்டு பயன்படுத்த வேண்டும். கூடுதலாக துணிகளை பயன்படுத்துவது மெஷினின் பயன்பாட்டு நீடிப்பை குறைக்கும்.
மெஷின் பயன்படுத்திய ஒவ்வொரு முறையும், அதனை ஒரு துணியால் துடைத்து வைக்க வேண்டும். இதன் மூலம், மெஷின் துருபிடிக்கும் அபாயம் குறையும். Google Play Store New Update: கூகுள் பிளே ஸ்டோரின் புதிய கொள்கை அப்டேட்.. முழு விவரம் இதோ..!
வாஷிங் மெஷினில் உள்ள லின்ட் பில்டரை 2 மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் தூசி படிதலை தடுத்து சுத்தமாக வைத்திருக்க முடியும்.
மெஷினை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தடை ஏற்பட்டால், உடனடியாக ஸ்விட்சை ஆஃப் செய்ய வேண்டும். மேலும், மெஷினில் உள்ள பட்டனையும் ஆஃப் செய்வது நல்லது. இதனை செய்ய தவறினால் மின்சாரம் வந்தவுடன் அதிகளவு பவர் அந்த மெஷினிற்கு பல சேதங்களை ஏற்படுத்தும்.
இதனை சரியான முறையில் கவனித்துக்கொள்வதன் மூலம் அதன் ஆயுட்காலம் பல ஆண்டுகள் நீட்டிக்கப்படும். வழக்கமாக சுத்தம் செய்வது மற்றும் ஹீட்டர், மோட்டார் மற்றும் குழாய்கள் போன்றவற்றை அடிக்கடி பராமரித்து வருவது ஆகியவை நல்ல பயனை அளிக்கும்.
மேலும், வாஷரைத் தொடர்ந்து பராமரிப்பது, வாஷிங் மெஷினைப் பழுதுபார்ப்பதற்கும் மாற்றுவதற்கும் பணத்தைச் சேமிக்க உதவும்.