Realme Narzo N65 5G: ரியல்மி நார்சோ N65 5ஜி ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகம்..! அதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் உள்ளே..!

இந்தியாவில் ரியல்மி நார்சோ N65 5ஜி ஸ்மார்ட் போன் நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட்டது.

Realme Narzo N65 5G (Photo Credit: @techaryan2610 X)

மே 28, சென்னை (Technology News): ரியல்மி நார்சோ N65 5ஜி ஸ்மார்ட் போன் (Realme Narzo N65 5G Smart Phone) இந்தியாவில் நேற்று (மே 27) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Narzo N55, இதன் அடுத்த N-சீரிஸில் இரண்டாவது போன் ஆகும். MediaTek Dimensity 6300 சிப்செட் மூலம், இந்த மொபைல் 5G நெட்வொர்க் ஆதரவைப் பெறுகிறது. இதன், முழு விவரக்குறிப்புகள் மற்றும் விலை விவரங்களை பற்றி இதில் பார்ப்போம். Healthy Spine: முதுகுத்தண்டை பராமரிக்க என்ன செய்ய வேண்டும்..? எளிய பழக்க வழக்க முறைகள் இதோ..!

விலை மற்றும் விற்பனை: இந்தியாவில் இந்த ஸ்மார்ட் போனின் விலை 4GB+128GB மாடலுக்கு ரூ.11,499 மற்றும் 6GB+128GB கொண்ட இதன் விலை ரூ.12,499. இந்த நிறுவனம் ஒரு கூப்பன் மூலம் பிளாட் ரூ 1,000 தள்ளுபடி வழங்குகின்றது. இது மே 31-ஆம் தேதி முதல் Amazon மற்றும் Realme இணையதளம் வழியாக விற்பனைக்கு வரவுள்ளது.

சிறப்பம்சங்கள்: இதில், 6.67 இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6nm செயலி மூலம் Mali-G57 MC2 GPU உடன் கிராபிக்ஸ் மூலம் இயக்கப்படுகிறது. சிப்செட் 4GB/6GB LPDDR4x ரேம் மற்றும் 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Narzo N55-யில் உள்ள 64MP கேமரா 50MP சாம்சங் JN1 சென்சார் மூலம் மாற்றப்பட்டுள்ளது. முன் கேமரா அதே 8MP செல்பி கேமரா. Narzo N55 ஆனது 33W வேகமான சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் வந்தது. ஆனால், Narzo N65-யில் 15W சார்ஜிங் வேகத்தை மட்டுமே வழங்குகின்றது.

ஆண்ட்ராய்டு 14 இல் Realme UI 5.0 கஸ்டமைஸ்டு ஸ்கின் உடன் இயங்குகின்றது. இந்த ஸ்மார்ட் போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP54 மதிப்பீடு மற்றும் 1115 அல்ட்ரா லீனியர் பாட்டம்-போர்ட்டட் ஸ்பீக்கர் போன்ற அம்சங்களுடன் வந்துள்ளது. மேலும், 5,000mAh பேட்டரி திறன் கொண்ட, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் கொடுக்கப்பட்டுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now