Samsung Galaxy Z Fold 6: சாம்சங் கேலக்ஸி Z போல்ட் 6 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்..! முழு விவரம் இதோ..!

சாம்சங் கேலக்ஸி Z போல்ட் 6 ஸ்மார்ட்போன் வருகின்ற ஜூலை 10-ஆம் தேதி பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகமாக உள்ளது.

Samsung Galaxy Z Fold 6 (Photo Credit: @T3dotcom X)

ஜூலை 05, சென்னை (Technology News): சாம்சங் நிறுவனம் அதன் அடுத்த தலைமுறையாக சாம்சங் கேலக்ஸி Z போல்ட் 6 (Samsung Galaxy Z Fold 6 Smart Phone) ஸ்மார்ட் போனை, அதன் Z Flip 6 உடன் சேர்த்து அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட் போன் வருகின்ற ஜூலை 10-ஆம் தேதி அன்று அறிமுகமாகிறது. முந்தைய மாடலை விட பெரிய பிரதான டிஸ்ப்ளே, பிரகாசமான ஸ்கிரீன் மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த ப்ராசஸர் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை Fold 6 கொண்டுள்ளது. Woman Doctor Dies By Suicide: கணவன்-மனைவி குடும்ப தகராறு; பெண் மருத்துவர் தற்கொலை..!

சிறப்பம்சங்கள்:

சாம்சங் முதன்மைப்படுத்திய போல்டேபிள் வடிவமைப்பையே Z Fold 6 கொண்டுள்ளது. ஆனால், இது சில மேம்பாடுகளுடன் வருகின்றது. Android 14-யில் சாம்சங் One UI 5 உடன் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் முதன்மை திரை 7.6 இன்சஸ் மற்றும் கவர் திரை 6.3 இன்சஸ் ஆகும். இரண்டு திரைகளும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டைனாமிக் AMOLED 2X பேனல்கள் கொண்டுள்ளது.

புதிய Snapdragon 8 Gen 3 ப்ராசஸர் உடன், இது உயர்ந்த செயல்திறனை உறுதி செய்கின்றது. இது 12GB ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில், 256GB முதல் 1TB வரை இருப்பதால், தேவைகளுக்கு ஏற்ற ஸ்டோரேஜ் திறனை வைத்துக் கொள்ளலாம்.

இதன் கேமரா அமைப்பு பின்புறத்தில் triple-lens அமைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது, இதில் 50MP பிரதான சென்சார், 12MP அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 3x ஆப்டிகல் Zoom கொண்ட 10MP டெலிஃபோட்டோ சென்சார் இருக்கும். முன்புற கேமரா 10MP கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில், 4400mAh பேட்டரி திறனுடன் வருகின்றது.