Bosch Layoffs: தொடரும் லேஆஃப் நடவடிக்கைள்.. 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் போஸ்ச் நிறுவனம்..!

ஜெர்மனியை தளமாகக் கொண்ட போஸ்ச் நிறுவனம், பெருவாரியான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Bosch Layoffs Representational Image (Photo Credits: Pexels, Wikimedia Commons)

டிசம்பர் 16, ஜெர்மனி (Technology News): ஜெர்மனியை தளமாகக் கொண்ட பன்னாட்டு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான போஸ்ச் (Bosch), வீட்டு உபயோக பொருட்கள், தொழில்நுட்ப சேவைகள் மற்றும் பிரேக் பேடுகள், சென்சார்கள், டிஸ்க்குகள் மற்றும் சேஃப்டி சிஸ்டம்கள் போன்ற வாகன தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது. இந்த ஆண்டில் நிறுவனம் தனது பொருளாதார இலக்குகளை அடைவதில் சிக்கல் இருப்பதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ (CEO) ஸ்டீபன் ஹார்டுங் தெரிவித்திருந்தார். Madonna & Pope Francis: அமெரிக்க நடிகையுடன் போப் பிரான்சிஸ்? ஏஐ கிளப்பிய பகீர் சர்ச்சை.. அதிர்ச்சியில் உலக நாடுகள்.!

கடந்த 2013ல் போஸ்ச் நிறுவனத்தின் வருவாய் 98 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது மற்றும் 5% லாபம் ஈட்டியது, ஆனால் 2024 ஆம் ஆண்டில் 4 சதவீதம் மட்டுமே ஈட்டியது, 2025-ஆம் ஆண்டில், நிறுவனம் விற்பனையில் 7% லாபத்தை அடைய இலக்கு வைத்துள்ளது என்றும் கூறியிருந்தார். இதனால் போஸ்ச் சுமார் 8,000 பேர் முதல் 10,000 பேர் வரை பணிநீக்கம் செய்யும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணிநீக்கம் ஜெர்மனியில் உள்ள பல்வேறு ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.